சென்னை, பிப்.20-
தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஸ்நேகா என்ற தனியார் அமைப்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்தியாவின் தற்கொலை சம்பந்தமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. இதில் இந்தியாவில் தமிழகம் தற்கொலை செய்து உயிரிழப்பவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மாநில அளவில் சென்னை நகரம் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சென்னையில் மட்டும் 2,214 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2015ம் ஆண்டு அறிக்கையிலும் தமிழகம் மற்றும் சென்னையே முதல் இடத்தில் உள்ளது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் ஆண்டுகளிலும் தற்கொலைகள் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் சமீபத்தில் டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை ஐ.பி.எஸ் அதிகாரி ஹரிஷ் தற்கொலை போன்ற உயரதிகாரிகளின் தற்கொலைகள் குறித்த பொதுமக்களின் கவனத்தை அதிகஅளவில் ஈர்த்து வருகிறது.suicide-2

Leave A Reply