சண்டிகர், பிப். 20-
அரியானாவில் இட ஒதுக்கீடு கோரி ஜாட் இன மக்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்து புத்த கேர ரயில் நிலையம் கொளுத்தப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது. ரோஹ்தக் மற்றும் பிவானி மாவட்டங்களில் ராணுவத்தினரால் கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது. போராட்டத்தில் தீவிரம் குறையவில்லையாதலால் முதலமைச்சர் மனோகர் கட்டார் அமைதி காக்க மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இரு மாவட்டங்களிலும் ரயில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூhriyanaடப்பட்டும் உள்ளன. ஒன்பது மாவட்டங்களில் ராணுவம் வரவழைக்கப்பட்டும், இரு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் உள்ளது. போராட்டம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மத்திய அரசு 3300 துணை ராணுவப் படையினரை அனுப்பி உள்ளதால் அரியானா  முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

Leave A Reply

%d bloggers like this: