சாவோடு யுத்தம் நடத்திய வீரன் தலைவர்கள், ராணுவத்தினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

புதுதில்லி, பிப்.11-

‘லான்ஸ் நாயக்’ ஹனுமந்தப்பா, 8 நாள் உயிர்ப் போராட்டத்திற்குப் பிறகு மரணம் அடைந்தார்.
ராணுவ மருத்துவமனையின் அவசர சிகிச்சை, நரம்
பியல் சிகிச்சை, சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகள் மற்
றும் அறுவை சிகிச்சை பிரிவுகளைச் சேர்ந்த மருத்
துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, அவருடைய உயிரை காப்பாற்ற கடந்த மூன்று நாட்களாக போரா
டினர்.
ஆனால் அவர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்து விட்டது.
மருத்துவச் சிகிச்சை
களால் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்
படாத நிலையில், வியாழ
னன்று காலை 11:45 மணிக்கு
ஹனுமந்தப்பாவின் உயிர்
பிரிந்தது. உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் ஹனு
மந்தப்பா உயிரிழந்தார் என்று ராணுவம் அறிவித்
தது.
6 நாட்களாக பனி
மலைக்குள் புதைந்து, மர
ணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பிய ஹனுமந்தப்பா, எப்படியும் உயிர் பிழைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பின
ரும் பிரார்த்தனை செய்து வந்தனர். கோயில், மசூதி,
தேவாலயங்கள், விகார்
களில் வழிபாடு நடத்தினர்.
குறிப்பாக, ஹனுமந்தப்பா
வின் மனைவி மகாதேவி
உட்பட அவரது குடும்பத்தி
னர், ஹனுமந்தப்பா பிழை
த்து வந்து விடுவார் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தனர்.
இந்நிலையில், ஹனு
மந்தப்பாவின் மரணம் அவர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
“ஹனுமந்தப்பா உயிரி
ழந்து விட்டார்; ஆனால் ஹனுமந்தப்பாவின் உள்
ளிருக்கும் வீரன் என்றுமே மறைய மாட்டான்; ஹனு
மந்தப்பா போன்ற வீரர்
களைக் கண்டு நாடே பெருமை கொள்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரி
வித்து உள்ளார்.
உலகின் மிக உயரமான யுத்த முனையாகவும், மைனÞ 60 டிகிரி செல்
சியÞ அளவிற்கு கொடூர
மான குளிர் வாட்டியெடுக்
கும் பகுதியாகவும் காஷ்
மீரின் சியாச்சின் பனி மலைச்சிகரம் உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.