மத்தியில் ஆளும் மக்கள் விரோத பாஜக அரசு ரயில்வே துறையை தனி யார் மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந் ததே. அதற்கு முன்பு மக்களிடமிருந்து தன்னால் எவ்வளவு சுரண்ட முடியும் என்ற முயற்சியில் அது தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 2013-14 கணக்கின்படி இவ் வாண்டில் சுமார் 840 கோடிப்பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதாவது நா ளொன்றுக்கு சுமார் 2கோடிப்பேர் இந்திய ரயிலில் பயணம் செய்கின்றனர். இவர் களிடம் ஆளொன்றுக்கு ஒரு ரூபாய் சுரண் டினால் ஆண்டொன்றுக்கு ரூ. 840 கோடி யையும் சுரண்டலாம் என்று மத்திய பாஜக அரசு கணக்கிட்டுள்ளது.

ஆனால் ஒரு பயணியிடம் ஒரு ரூபாயை மட்டுமல்லாது, பயணிகள் அனைவரிடம் இருந்தும் எவ் வாறு பணத்தைக் கறக்கலாம் என்பதை அது நன்கு கணக்கிட்டுள்ளது.ஒரு பயணியின் துயரம்நீங்கள் ஹைதராபாத் செல்ல வேண் டும் என்றால், முந்தைய ரயில்வே விதி களின்படி மதுரையில் இருந்து சென் னைக்கு ஒரு ரயிலிலும், அங்கிருந்து ஹை தராபாத்துக்கு மற்றொரு ரயிலிலும் முன் பதிவு செய்து கொண்டு பயணம் செய்ய லாம். அதற்கு கட்டணமாகச் செலுத்தும் தொகை மதுரையில் இருந்து ஹைதரா பாத் செல்வதற்குரிய தூரத்தின் அடிப்படை யில் (வநடநளஉடியீiஉ னளைவயnஉந உhயசபந) கணக் கிடப்படும். ஆனால் தற்போது அவ்வாறு கணக்கிடப்படுவதில்லை என்று ஒருபணி நியமன நேர்காணலுக்காக ஹைதரா பாத் சென்ற பயணி தன்னுடைய அனுப வத்தை வேதனையுடன் பகிர்ந்து கொள் கிறார்.அவருக்கு திங்களன்று காலை பத்துமணிக்கு நேர்காணல். மதுரையில் இருந்து செல்லும் கச்சேகுடா விரைவு ரயில் (சென்னை சென்ட்ரல் போன்று கச்சே குடா ஹைதராபாத்தில் உள்ள மற்றொரு ரயில் சந்திப்பு)திங்கள் பிற்பகலில் சென்றடை கிறது. மற்ற இரண்டு வண்டிகளான ராமேஸ் வரம் – ஓக்கா விரைவு ரயிலும், நாகர் கோயில் – கச்சேகுடா விரைவு ரயிலும்ஞாயிறு அன்று கச்சேகுடா சென்றடை யாது.

ரயிலை விட்டு இறங்கியவுடன் நேர் காணலுக்குச் செல்ல முடியாது என்பதால், அவர் ஞாயிறு அன்றே ஹைதராபாத் செல்லத் திட்டமிட்டார். அதன்படி அவர் வெள்ளியன்று பாண்டியன் விரைவுரயிலில் சென்னைக்கும், சென்னையி லிருந்து ஹைதராபாத்துக்கு சார்மினார் விரைவு ரயிலில் பயண முன்பதிவு செய் தார். தொலைதூர கட்டண நிர்ணய அடிப் படையில் அவர் ரூ.516(சுமார்) ரயில் வேக்கு செலுத்த வேண்டும். ஆனால்ரயில்வே அவரிடம் ரூ.740 கேட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் ஏன் கட்ட ணம் கூடுதலாக உள்ளது என்று கேட்டார். அதற்கு முன்பதிவு அலுவலர் மதுரை யில் இருந்து நேரடியாக ரயில்கள் செல் லும் இடத்துக்கு மட்டுமே தொலை தூரக் கட்டண நிர்ணய முறை நடை முறைப்படுத்தப்படும் என்றும் நீங்கள் கேட்டபடி முன்பதிவு செய்தால் அம் முறைப்படி கட்டணக் கணக்கீடு செய்யக்கூடாது என்று ரயில்வே உத்தரவிட்டுள் ளது என்று கூறியுள்ளார். அத்துடன் அங் குள்ள தகவல்பலகையில் ஒட்டப் பட்டுள்ள அறிவிப்பையும் அவர் சுட்டிக் காட்டினார்.இந்த அறிவிப்பின்படி அகமதாபாத், ஆக்ரா போன்ற நகரங்களுக்குச் செல்ல விரும்புவோர் மதுரையில் இருந்து செல்லும் வண்டிகளில் மட்டுமே பதிவு செய்தால் தொலைதூரக் கட்டண நிர்ணய முறையின்படி பலன் அடைய முடியும்.இல்லாவிட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய பரிதாபத்துக்கு உள் ளாக வேண்டும்.

இனி வருங்காலங்களில் மும்பை, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களின் வீடு களுக்குச் செல்வது குறித்து முன்யோ சனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. சண்டிகர், டேராடூன், கொல் கத்தா, ஓக்கா, சூரத், போன்ற நகரங் களுக்கு மதுரையில் இருந்து பல ரயில்கள் இருந்த போதும், அவை நமது விடுமுறை, பண் டிகை நாட்கள், நேர்காணல் போன்றவை களையொட்டி பயணம் செய்வதற்கு பொருந்தாத வகையில் வாராந்திர, வார மிருமுறை, வாரம் மும்முறை செல்லும் வண்டிகளாகவே உள்ளன. ரயில் பயணி களைச் சுரண்ட ரயில்வே கண்டு பிடித் துள்ள ஒரு தந்திரமாகும் இது.

ரயில்வே நிதி நெருக்கடி

ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்ளும் இந்தியக் குடிமகன் பயணத் தேதிக்கு 120 நாட்களுக்கு முன்னதாக தன்னு டைய பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று ரயில்வே ஒரு சுற்ற றிக்கை மூலம் அறிவித்தது. 1970களில் 30 நாட்களுக்கு முன்னதாக ஒருவர் தனதுபயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள் ளலாம். 1980களில் கணினி மூலம் பதிவு கள் செய்யப்பட்ட பின்னர் இந்த நாட்கள் 60 ஆக உயர்த்தப்பட்டன. சில ஆண்டு களுக்கு முன்பு இவை 120 நாட்களாக மாற்றப்பட்டு, பின்னர் மே 2014 முதல் 90நாட்களாகக் குறைக்கப்பட்டு, தற்போது 1.4.2015 முதல் இந்நாட்கள் மீண்டும் 120ஆக உயர்த்தப்பட்டது. இது ஏதோ பயணி களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முற் போக்கு நடவடிக்கை போல் மத்தியில் ஆண்ட இரு கட்சிகளும் நாடகமாடின.

ஆனால் இது ரயில்வேயின் நிதி நெருக் கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக் கையே ஆகும்.விமானப்பயணங்களின் போது முன் பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கு, முன்பதிவு செய்யப்படும் நாளில் இருந்து பயணமாகும் நாட்களுக்கும் இடையில் உள்ள நாட்கள் 30க்கு மேல் இருந்தால் பயணக்கட்டணத்தில் சலுகை அளிக்கப் படும். இந்த நாட்கள் 60, 90, 120, 150, 180 நாட்கள் இருந்தால் இந்தப் பய ணச் சலுகை அதிகரித்துக் கொண்டு செல்லும். ஆனால் ரயில்வே முன்பதி வில் இந்தக் கட்டணச் சலுகை அளிக்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விமானப்பயணத்தில் கட்டணச் சலுகையுடன், பயண நேரமும் குறைவு என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். மதுரை – தில்லி பயணக்கட்டணம் ரயிலில்முதல் வகுப்பு ஏசியில் ரூ.5725 ஆகும்.

ஒரு மாதத்துக்கு முன்பாக முன்பதிவு செய்தால் சலுகையாக ரூ.300 அளிக்கப்படும். ரயிலில் தில்லி செல்ல பயணிக்கும் நேரம் சுமார் 42 மணி நேரமாகும். ஆனால் விமானத்தில் பயணம் செய்தால் அதிக பட்சமாக 11 மணி நேரமாகும். விமான வேகத்தில் ரயில் செல்ல முடியாது என்பது கவனிக்கத்தக்கது.ஒரு வங்கியில் ரூ.1000த்தை சிறுசேமிப்பில் போட்டு வைத்தால் 4 விழுக் காடு வட்டி அளிக்கப்படும். அதாவது ஆண் டுக்கு ரூ.40 கிடைக்கும். இதுவே நிர்ணய சேமிப்பாக இருந்தால் அதற்கு வட்டி விகி தம் குறைந்தது 8சதவீதமாக இருக்கும். ரயில்வே நான்கு மாதங்களுக்கு முன்பாக பெறும் பயணக்கட்டணத்துக்கு வட்டிஅளிக்க வேண்டும் அல்லவா? அதைத் தானே விமான நிறுவனங்கள் செய்கின் றன. பிறகு ஏன் ரயில்வே செய்ய மறுக் கிறது? இவ்வாறு நான்கு மாதங்களுக்கு வசூலாகும் பணத்தை வைத்து தனது அன் றாட நிர்வாகச் செயல்களைச் சமாளித்து வருவதால் பயணிகளுக்கு சலுகை தரமறுக்கிறது.

2014ல் ஆட்சிக்கு வந்த வுடன் தே.ஜ.கூட்டணி அரசு முன் பதிவுக் காலத்தை 120 நாட்களில் இருந்து90 நாட்களாகக் குறைத்தது. அடுத்து வந்த 11 மாதங்களில் ஏற்பட்ட நிதி நெருக் கடிக்கு காரணம் முன்பதிவுக்காலத்தை குறைத்தது தான் என்பதை உணர்ந்த அது மீண்டும் முன்பதிவுக்காலத்தை மீண்டும் 120 நாட்களாக உயர்த்தியது.மக்களைச் சுரண்ட ரயில்வே கண்டு பிடித்த மற் றொரு தந்திரமாகும் இது.

அவதிப்படும் மக்கள்

கடந்த நவம்பர் 12 முதல் ரயில்வே முன் பதிவு ரத்து கட்டணங்கள் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் சில அபூர்வமான சூழ்நிலைகளில் பய ணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு சிலசலுகைகள் கிடைத்துள்ளன.இதற்கு முன்பு ரயில் புறப்பட்ட இரண்டு மணி நேரத் துக்குள் ஒருவர் பயணத்தை ரத்து செய்து 25 சதவீதம் கட்டணத்தை திரும்பப் பெற முடியும் என்று ரயில்வே விதிகள்கூறுகின்றன. ஆனால் புதிய விதிகளின் படி ரயில் புறப்பட்ட பின் பயணத்தை ரத்து செய்ய முடியாது. அதே போல் ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்துக்குமுன்பு வரை 50 சதவீதம் கட்டணக்கழி வுடன் பயணத்தை ரத்து செய்ய முடியும். ஆனால் இப்போது இந்த நேரம் 6 மணியாகக் குறைக்கப்பட்டுள்ளது.முதல் வகுப்பு ஏசி முன்பதிவு ரத்துக்கட்டணம் ரூ.120ல் இருந்து ரூ. 240 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பயணம் செய்வோர் உயர்தட்டு மக்க ளும்,அரசு அதிகாரிகளும் தான். இவர் களில் உயர்தட்டு மக்கள் இந்த உயர்வைத் தாங்கக்கூடியவர்கள். அவர்களில் பெரும் பாலோர் விமானத்தில் அல்லது சொந்தக் காரில் பயணிக்கின்றனர். அரசு அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தில் பயணிப்பவர்கள். அவர்கள் ரத்து செய்வதால், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது.வழக்கம் போல் அரசு உண்மையான பயணிகளை தரகர்களிடம் இருந்து பாதுகாக்கவும், அரசு அளிக்கும் பயணச் சீட்டு நடவடிக்கைகளைத் தவறாகப் பயன் படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் ரத்துக் கட்டணத்தை உயர்த்துவதாகக் கூறு கிறது. ஆனால் இப்போதும் ரயில்வே நிலை யங்களில் தரகர்களின் ஆதிக்கம் குறைய வில்லை. பயணிப்பவரின் அவசரத்தைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கும் இவர் களுக்கு இதுவெல்லாம் ஒரு சுமையாகத் தெரியாது.

ஏனெனில் அவர்கள் இதையும் பயணிகளிடம் வசூலித்து விடுவார்கள். எனவே ரத்துக் கட்டண உயர்வால் லாபம்அடைவது ரயில்வே துறை மட்டுமே. 2011- 12 – ஆம் நிதியாண்டில் ரத்துக்கட்டண வசூல் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.564.12 கோடியாகும். இது 2013-14-ஆம் நிதி யாண்டில் ரூ.932.99 கோடியாக அதிகரித் துள்ளது. தற்போதைய உயர்வுக்குப் பின் ரயில்வே ரத்துக்கட்டண வசூல் மூலம் பல மடங்கு உயர்த்தி விடும்.

சுவிதா ரயில் அறிமுகம்

கடந்த ஆண்டு அறிமுகமான பிரிமியம் ரயிலை ரத்து செய்து விட்டு ரயில்வே புதிதாக சுவிதா ரயிலை இவ்வாண்டு ஜூலை முதல் அறிமுகம் செய்துள்ளது. பிரிமி யம் ரயில் பயணச்சீட்டை இணைய தளம் மூலம் மட்டுமே பெற முடியும். இதனால் இது எதிர்பார்த்த பலனை அரசுக்கு அளிக்க வில்லை. எனவே சுவிதா ரயிலை அறிமுகம்செய்துள்ளது.இந்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு அல்லது ரத்துக்கு மாற் றாக அளிக்கப்படும் (ஆர்ஏசி) பயணச் சீட்டுகள் மட்டுமே அளிக்கப்படும். இச் சீட்டுகளை இணையதளத்தின் மூலம் அல்லது முன்பதிவு கவுண்ட்டரில் பெற்றுக் கொள்ளலாம். இதன் கட்டணம் சாதா ரண அதிவிரைவு ரயில்களை விட கூடுத லாக இருக்கும்.அதாவது கிட்டத்தட்ட தட்கல் கட்டணத்தை ஒட்டி வரும். முதல் இருபது விழுக்காடு பதிவு முடிந்த வுடன், கட்டணம் உயர்த்தப்படும்.தட்கல்கட்டணத்தைப் போல் மூன்று மடங்கு கட்டணம் வரை செலுத்த வேண்டியிருக் கும். இந்த ரயிலில் அரைக்கட்டணம், முதியோர்,மகளிர் கட்டணச்சலுகை உள் ளிட்ட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. முன்பதிவுக்கட்டணம், விரைவு ரயில் கட்ட ணம் உள்ளிட்ட பிறகட்டணங்கள் வசூலிக்கப்படும்.பயணிகள் அங்கீகரிக்கப் பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும். பயணச்சீட்டை ரத்து செய்யும் வசதி உள்ளது.இது குறிப்பிட்ட நாட்களில் ஓடும் வண்டி அல்ல. பயணச் சீட்டுக்கு அலைமோதுவோரிடம் பணம் பறிக்கும் திட்டத்தோடு இந்த ரயில் ஓட்டப்படுகிறது.இந்த ரயில்களில் வண்டி புறப்படுவதற்கு முன்பு 30 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை முன்பதிவு செய்யலாம். இந்த ரயிலில் பயணச்சீட்டை எப்போது ரத்து செய்தாலும் 50விழுக்காடு கட்ட ணமும், இதர கட்டணங்களும் கழித்துக் கொள்ளப்படும்.

இது மக்களைக் கொள் ளையடிக்கும் செயல் அல்லவா?மக்களுக்கு சேவைத்துறையாக ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ரயில்வே துறை சில ஆண்டுகளுக்கு முன்புவரை சேவைத்துறையாகவே நீடித்து வந்தது. ஆனால் அனைத்தும் உலகமயம், தாராளமயம், தனியார் மயம் என்ற மயங் களின் வலையில் சிக்கி விட்ட மத்திய அரசு களால் இதை மட்டும் பாதுகாக்க முடியுமா?இதையும் தனியார் மயமாக்கும் முயற்சி யில், உணவு, பயணச்சீட்டு வழங்கல் போன்றவை ஏற்கனவே தனியாரிடம் ஒப் படைக்கப்பட்டு விட்டது. தற்போதைய சூழலில் தேஜ கூட்டணி அல்லது ஐமு கூட்டணி அரசு ஆகிய இரண்டில் எது பதவியில் இருந்தாலும், அவை மக்களிடமிருந்து பணத்தை எவ்வாறு கறப்பது அல்லது அவர்களின் நலன்களை எவ்வாறு பறிப்பது என்பதில் தான் குறியாக உள்ளன.

Leave A Reply