குயிட்டோ, பிப். 11 –

இடதுசாரிக் கொள்கைகளை நடை முறைப்படுத்தியலிருந்து ஈக்வடாரில் வறுமைப்பிடியிலிருந்து ஏராளமான மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.தென் அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கம் ஈக்வடாரிலும் பிரதிபலித்தது. வலதுசாரிக் கொள்கை களால் துயரத்தில் மூழ்கியிருந்த மக்கள்,இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு ஆதரவளித்தனர். மக்களுக்கு மிகவும் நம்பிக்கை யளித்த ரபேல் கோரியா, ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையின்கீழ் பல்வேறு மக்கள் நலக் கொள்கை கள் நடைமுறைக்கு வந்தன. குறிப்பாக, கேந்திரத் தொழில்கள் அனைத்தும் நாட்டுஉடமையாக்கப்பட்டன. அதிலிருந்து கிடைக்கும் வருமானம் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வற்றிற்காகப் பயன்படுத்துவது என்று அவர் முடிவெடுத்தார்.

கடந்த பல ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்துள்ளது. ஈக்வடாரின் தேசிய புள்ளிவிபர மையம் அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள் ளனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் தில் பல வகையிலான வறுமையால் வாடியஈக்வடார் மக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையில் 51.5 சதவிகித மாக இருந்தது. 2015 ஆம் ஆண்டின் இறு தியில் இந்த எண்ணிக்கை 35 சதவிகிதமாகச் சரிந்துவிட்டது. 16.5 சதவிகித அளவுக்கு வறுமை குறைந்துள்ளது.ரபேல் கோரியா தலைமையிலான அரசின் நடவடிக்கைகள்தான் இந்த வறுமைக்குறைப்புக் காரணம் என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மக்களின் எண்ணிக்கைப்படி பார்த் தால், இந்தக் காலக்கட்டத்தில் 19 லட்சம்பேர் வறுமைக் கோட்டிற்கு வெளியில் வந்துள்ளனர். இது குறித்துக் கருத்து தெரிவித் துள்ள ஜனாதிபதி ரபேல் கோரியா, அதி காரப் பகிர்வு மற்றும் அதிகார உறவுகள் மூலமாகப் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும். அரசியல் நடைமுறையும் இதில் முக்கியப் பங்காற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமையை ஒழிப்பதையே தனது பிரதானப் பணியாக ரபேல் கோரியா எடுத்துக் கொண்டார்.வருமானம் மட்டுமல்லதலைநகர் பகுதியைப் பொறுத்த வரையில் வறுமை ஒழிப்பு மிகவும் திட்ட மிட்ட வகையில் நடைபெற்றுள்ளது. அதன் பலன்களை மக்கள் அனுபவிக்கத் துவங்கியுள்ளார்கள் என்று புள்ளி விபர மையத்தின் இயக்குநர் ஜோஸ் ரோசெரோ கூறியுள்ளார். பல வகை யிலான வறுமைக்கோடு என்ற அம்சத்தைஈக்வடார் கடைப்பிடிக்கத் துவங்கி யுள்ளது.

வெறும் வருமானம் அல்லது நுகர்வு ஆகியவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்வி, வேலை, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம், தண் ணீர், உணவு, வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் ஆய்வில் இணைத் திருக்கிறார்கள்.இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்து இத்தகைய அளவீட்டு முறையை ஈக்வடார் பின்பற்றி வருகிறது. தற்போது கொலம்பியா, சிலி, மெக்சிகோ, கோஸ்டாரிகா மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலும் இந்த முறையைப் பின்பற்றத் துவங்கியிருக்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.