மதுரையில் திரண்டுள்ள இந்தக் கூட்டம், குறிப்பாக இளைஞர்கள் கூட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே ஒரு மாற்றுக்கொள்கையுடன் கூடிய ஒரு இயக்கம் தேவை என்பதை உணர்த்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் திமுக,அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும்கால்பந்தாட்டப்போட்டி நடத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு கோல் போஸ்டில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் நின்று கொண்டிருக்கிறது, மாற்றொரு புறத்தில் உள்ள கோல் போஸ்டில் அளவுக்கதிகமான சொத்து சேர்த்த வழக்கு நின்று கொண்டிருக்கிறது.தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஐ.டி.துறையில் வெளிநாடுகளில் சிறப்பான முறையில் பணியாற்றிவருகின்றனர். ஆனால், தமிழகத்தின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பளிக்கும் நடவடிக்கையை எதிர்காலத்தில் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கும்.திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வருவதற்காக மாறி மாறி வாக்குறுதிகளை அளிப்பர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குறுதிகளை மறந்துவிடுவர். ஊழலில் ஊறித்திளைக்கும் அதிமுக, திமுக-வுக்கு மாற்றாக தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி உருவாகியுள்ளது. இந்த உற்சாகமும், உத்வேகமும் தேர்தலில் பெருவாரியான வெற்றியை பெற்றுத்தரும்.பொதுவாக தேர்தல் முடிந்த பிறகு தான் குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது அரசியல் கட்சிகளால் உருவாக்கப்படும். ஆனால், தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பே மக்கள் நலக்கூட்டணிகுறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி மக்கள் மத்தியில்வைத்துள்ளது.ஒருவருக்கு ஒரு ஓட்டு, ஒரே மதிப்புஎன்ற அரசியல் சமத்துவத்தை பாதுகாக்கவேண்டும். அதற்கு அரசியல் பொருளாதார சமத்துவம் வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தினார். நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் பெரும்பகுதி 100 பகாசுர கோடீஸ்வரர்களின் கையில் உள்ளது. நாட்டின் தொழில் உற்பத்தி 2.3 சதவீதமாக குறைந்துவிட்டது.

நேரடி உற்பத்தி 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் இயங்கிவந்த நோக்கியா ஆலை மூடப்பட்டுவிட்டது.சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய்யின் விலை குறைந்துவருகிறது. ஆனால்,அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை. வரிகளை விதித்து மக்களை கசக்கிப் பிழிகின்றனர்.பணக்காரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5லட்சம் கோடி வரிச்சலுகையை அரசு அளிக்கிறது. அந்த வரிச்சலுகையை குறைத்தாலே மதுவிலக்கைஅமல்படுத்த முடியும்.சமூக ஒடுக்குமுறையும், பொருளாதாரச் சுரண்டலும் அதிகரித்துள்ளது. மத்தியிலும்-மாநிலத்திலும் ஆட்சியாளர்கள் ஊழலில் ஊறித்திளைத்துள்ளனர்.ஹைதராபாத்தில் தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் தெருவில் செல்லும் நாய் மீது கல்லெறிந்தால் என்ன செய்வது என ஏளனம் பேசுகிறார்.திமுகவும் அதிமுகவும் பாஜகவின் வகுப்புவாதம் பற்றி பேச மறுக்கின்றன. நாட்டில் சகிப்பின்மையையும், வகுப்பு வாதத்தையையும் வளர்க்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் வகுப்பு வாதத்திற்கு எதிராக பல எழுத்தாளர்கள் தங்களது விருதுகளை திரும்ப அளித்து வருகின்றனர்.

நாட்டில் வகுப்புவாதம் பரவுவதைத் தடுக்க உள்ள ஒரே வாய்ப்பு மக்கள் நலக்கூட்டணிக்குத்தான் உள்ளது. ஊழலைஎதிர்த்துப் போராட, மக்கள் விரோத, தலித்விரோத ஆட்சியாளர்களை முறியடிக்க மக்கள் நலக்கூட்டணி உருவாகியுள்ளது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.அவரது ஆங்கில உரையை பேராசிரியர் அருணன் தமிழாக்கம் செய்தார்.

Leave A Reply

%d bloggers like this: