திருவனந்தபுரம், ஜன.14-

இந்தியாவில் ஆரம்பக் கல்வி, 100 சதவிகிதம் பேரையும் சென்றடைந்த முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீதுஅன்சாரி இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கேரளாவின் இந்த சாதனை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும், இச்சாதனை மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளா திகழ்வதாகவும் அன்சாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave A Reply