சிவகங்கை, ஜன.14-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநிலக்குழுக்கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ தலைமையில் திருப்புவனம் அருகே யுள்ள மடப்புரத்தில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆர்.கே.தண்டியப்பன் வரவேற்றுப் பேசினார். அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, மாநிலக்குழு பொறுப்புச் செயலாளர் அமிர்த லிங்கம் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.2015 நவம்பர், டிசம்பரில் தமிழகம் முழுவதும் பெய்த பெருமழை யினால் சென்னை, கடலூர், காஞ்சி புரம், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் மிகப்பெரிய அவதிக்குள்ளாகினர். மத்திய அரசோ, மாநில அரசோ உழைக் கின்ற மக்களின் கஷ்டத்தை உணர்ந்துகொண்டு அறிக்கை கொடுக்காததற்கு மாநிலக்குழு வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இத் தொழிலாளர் களுக்கு குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிவார ணம் வழங்க வேண்டும்.லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வீடிழந்துள்ளனர். கண்மாய் புறம்போக்கு, நீர்பிடிப்பு பகுதி, கால்வாய் புறம்போக்கு என்று பல ஆண்டுகளாக குடியிருந்துவரும் வீடுகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான விவசாயத் தொழி லாளர்களின் வீடுகள் இடிபடும் நிலை உள்ளது.

வீடு இழக்கிற விவசாயத் தொழிலாளர்களுக்கு மாற்று இடங்களோடு அடுக்குமாடி குடியிருப்புகளாக வீடுகள் கட்டித்தர வேண்டும். மழையின் காரணமாக விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காத நிலை இருந்தது.

இக்காலங்களை கணக் கில் கொண்டு நூறுநாள் வேலைத் திட்டத்தை விரிவாக்கம் செய்து 200 நாட்களுக்கு வேலை தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைசெய்கிறவர்களுக்கு சட்டக்கூலியான ரூ.183 வழங்க வேண்டும். காலதாமதம் இல்லாது ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயத் தொழிலாளர்களுக்கு நிறுத்தப்பட்ட முதியோர் ஓய் வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். வறுமைக்கோட்டில் வாழ் கிற அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும், 60 வயதான அனைவருக் கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜன.19-ல் போராட்டம்

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகிகள் அஞ்சான், நாகூரான் நினைவு தினமான ஜனவரி 19 அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக மாநிலத் தலைவர் ஏ.லாசர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.