மதுரை,ஜன.14-

மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க எழுச்சி மாநாடு ஜனவரி 26 அன்று மதுரையில் நடை பெறுகிறது. மாநாடு நடைபெறும் ஒத்தக்கடையில் உள்ள மாநாட்டுத் திடலை மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ மற்றும் தலைவர்கள் வியாழனன்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கவே மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்துகூட்டணியை உருவாக்கி யுள்ளோம். கூட்டணி கட்சிகள் சார்பில் ஜனவரி 26-ம் தேதியன்று பல லட்சம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் குறைந்த பட்ச செயல் திட்ட விளக்க மாநாடு நடைபெற வுள்ளது. இந்த மாநாட்டில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் து.ராஜா எம்.பி., மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுகசார்பில் நானும் பங்கேற்கின்றேன்.

இந்த மாநாடு தமிழக மக்களின் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத் தில் ஆளும் அதிமுக மற்றும் திமுகஆகிய இரண்டு கட்சிகளும் பெரும் ஊழல் கட்சிகள். இக்கட்சிகளை வரும் சட்டமன்றத் தேர் தலில் மக்கள் புறக்கணிப்பார்கள். எங்கள் கூட்டணிக்கு பெரும் ஆதரவு கிடைக்கும். ஏனென்றால் ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய மக்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக மக்கள் நலக் கூட் டணி வெற்றிபெறும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களது கூட்டணி கட்சிகள் எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் உதவி செய்துள்ளோம். அதேபோல் பல இணையதள நண்பர்களும் உதவியுள்ளனர் என்று குறிப்பிட் டார்.

பேட்டியின்போது மதிமுக மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, புறநகர் மாவட்ட செயலாளர் கதிரேசன், சின்னசெல்வம், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், மாநில தொழிற்சங்க செயலாளர் மகபூப்ஜான், சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப் பினர் இரா.அண்ணாதுரை எம்எல்ஏ., சிபிஐ மாநகர் மாவட்ட செயலாளர் மகேந் திரன் , புறநகர் மாவட்ட செய லாளர் காளிதாஸ், வி.சி.க. மாநகர் மாவட்டச் செயலாளர் கதிரவன், மேற்கு மாவட்டச் செயலாளர் இன்குலாப் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: