இயற்கை, உழைப்பு, ஒற்றுமை, பகிர்வு – இந் நான்கும் இணைந்த பண்பாட்டு அடையாளமே பொங் கல். உயிர்வாழ அடிப்படையான உணவு உற்பத்திக்கு மூலமாகிய சூரியனைப் போற்றுதல், உழுது பயிரிட்டு விளைவிக்கும் உழைப்பை உயர்த்துதல், ஊரே கூடிமகிழ்ந்திருத்தல், பசித்திருப்பவர்களுக்குப் பகிர்ந் தளித்து மன நிறைவடைதல் என்ற வாழ்வியல் அழகுபொங்கலில் கலந்திருக்கின்றன. உலகம் முழுவதும் பரந்திருக்கிற தமிழ் மக்கள், மதம் கடந்து சாதி கடந்து கொண்டாடுகிற பாரம்பரியக் கொண்டாட்டம் பொங்கலன்றி வேறில்லை என்றால் மிகையில்லை. அவரவர் நம்பிக்கைப்படி வழிபாடுகளோடுதான் இருக்கும் என்றாலும் பொங்கல் விழாவின் சிறப்பு சகமனிதர்களோடு சேர்ந்து கொண்டாடுவதிலும் பகிர்வதிலும்தான் பொதிந்திருக்கிறது. பொங்கல் நாளுக்கு மறுநாளைய மாட்டுப்பொங்கல், அதற்கடுத்த நாளின் காணும் பொங்கல் ஆகியவை அதன் வெளிப்பாடுகளேயாகும்.

இந்த ஒற்றுமைப் பண்பாட்டின் மீது வன்மத் தாக்குதல்கள் தொடுக்கப்படும் காலகட்டத்தில் இவ் வாண்டின் பொங்கல் வந்திருக்கிறது. ஏகாதிபத்திய ஆதரவோடு உலகம் முழுவதும் கால் பரப்புகிற சுரண் டல் கூட்டங்களும், அவர்களது சந்தை வேட்டைக்குவளைக்கப்படும் சட்டங்களும் அந்தத் தாக்குதல் களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. உலகுக்கு உணவளிக்கும் உழவர்களின் உயிர்ச்சார்பாகிய நிலத்தைக் கைப்பற்றி அந்த உள்நாட்டு-பன்னாட்டுப் பெருவர்த்தகக் குழுமங்களுக்குத் தாரை வார்க்கச் சட்டம் தயாரிக்கப்படுகிறது; தொழிலாளர் கள் ஒன்றுபட்டுப் போராடுவதைத் தடுப்பதற்காகத் தொழிற்சங்கச் சட்டங்கள் உருக்குலைக்கப் படுகின்றன; சங்கமாகவே திரள்வதைத் தடுக்க அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.இந்த சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு உழைப்பாளிகள் விழித்தெழுவதைத் தடுக்க பகைமையைக் கிளறிவிடும் அடையாள அரசியல் திட்டமிட்டுப் புகுத்தப்படுகிறது.

உலகம் முழுவதுமே இது நடைமுறை யாகியிருப்பதும், பல நாடுகளில் இனவாத, மதவாதபிற்போக்குக் குழுக்களும் அப்பட்டமான வலதுசாரிசக்திகளும் அதிகார மேடைகளை ஆக்கிரமித் திருப்பதும் இப்போக்கின் விளைவுகள்தான். இதன் இந்தியப் பதிப்பாக, மத்திய ஆட்சிக்கு பாஜக வந்த தைத் தொடர்ந்து இந்து மதவெறி அமைப்புகள், தங் களது அத்துமீறல்களுக்கெல்லாம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துவிட்டதைப் போல தலை விரித்தாடுகின்றன. எளிய நம்பிக்கைகளோடு வாழும் இந்து மக்களின் மனங்களில், ஏதேனும்சர்ச்சைகளைக் கிளப்பிவிடுவதன் மூலம், சிறு பான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக நஞ்சு வளர்க்கும் சதிகள் அரங்கேற்றப்படுகின்றன.இந்தப் போக்கை மறுக்கக்கூடிய முற்போக்குச் சிந்தனைகள் மக்களிடையே பரவாமல் தடுக்க, பலவழிகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப் படுகிறது.

நாட்டில் இப்படிப்பட்ட சகிப்பின்மை வளர் வது நல்லதல்ல என்று கவலையோடு கருத்துச் சொல்கிறவர்கள் தேசவிரோதிகள் போலச் சித்தரிக்கப் படுகிறார்கள். தமிழகத்திலும் இது வெவ்வேறு வழிகளில் நுழைகிறது. பாரம்பரியமான தமிழர் பண்பாடுஎன்று கடைப்பிடிக்கப்படும் ஜல்லிக்கட்டு, திடீரெனஇந்துக்களின் பண்பாடு என்று முன்வைக்கப்படுவதன் நுண் அரசியல் குறித்து மிகுந்த எச்சரிக்கை தேவைப்படுகிறது. கருத்துரிமையை பாதுகாக்க வேண்டிய அரசே அவதூறு வழக்குகள் மூலமாகவும், அதிகாரிகளது கட்டப்பஞ்சாயத்துகள் மூலமாகவும் ஒடுக்குமுறைக்கு உடந்தையாகிறது. இப்படிப் பட்ட சூழலில், பகிர்ந்துகொள்ளப்படும் பொங்கல் வாழ்த்துகள் உழவர்கள், உழைப்பாளிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் ஒற்றுமைப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பதாக ஒலிக்கட்டும்.

Leave A Reply

%d bloggers like this: