முரசொலி ஏட்டில் (13.1.2016) க.திரு நாவுக்கரசு ‘கண்ணைத் திறந்தால் அவன் ரூபம்; காதைத்திறந்தால் அவன் கானம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். சென்னையில் நடை பெற்று வரும் இசை விழாவில் பாடப் பட்ட பாடல் தான் கட்டுரையின் தலைப்பு. அந்தப் பாடல் வருவது போல கண்ணைத் திறந்தால் கலைஞரின் ரூபம் தெரிவதாக வும், காதைத் திறந்தால் அவரது கானம்கேட்பதாகவும் புளகாங்கிதமாக எழுதியுள் ளார் திருநாவுக்கரசு. கலைஞரையும், ஸ்டா லினையும் புகழ்வது அவரது பிறப்புரிமை. மார்கழி மாத பஜனைப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் கலைஞரே தெரிவதா கக் கூட அவர் எழுதட்டும். நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் இடதுசாரி இயக் கங்களின் மீது குறிப்பாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மீது அவர் கூறியுள்ள அவதூறுகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது.அதிமுக அரசு எதிர்ப்பு என்ற ஒற்றை அம்சத்தை மட்டும் கணக்கில் கொண்டு திமுகவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் ஆதரிக்கவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குஆத்திரமாக மாறியுள்ளது.

அந்த ஆத்திரத் தில் புழுதியை வாரித் தூற்றுகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரு கின்றன. மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியுள்ளதோடு, குறைந்த பட்ச செயல்திட்டத்தையும் வெளியிட் டுள்ளன. இது தமிழக அரசியலில் நடந்தி ராத ஒன்று. ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் தருவோம் என மக்கள் நலக்கூட்டணி பிரகடனம் செய்துள்ளது. இத்தகைய ஒரு உறுதிமொழியை தரக்கூடிய திராணி அதிமுகவுக்கோ, திமுகவுக்கோ வேறுபல கட்சிகளுக்கோ இல்லை. 1967-இல் நிலவிய அரசியல் சூழ்நிலை யை சுட்டிக் காட்டி அதே போன்று தற் போது அதிமுகவை எதிர்க்க இடதுசாரி கட்சி களும் இணைய வேண்டியதுதானே.

இரண்டு கட்சிகளும் இல்லாத மாற்று வழி தேடுவது ஏன் என்று கேட்கிறார் திருநாவுக்கரசு. விடுதலைக்குப் பிறகு மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப் பிற்கு வந்த காங்கிரஸ் கட்சி பின்பற்றிய மக்கள் விரோதக் கொள்கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் வெறுப்பை சம்பாதித்தது. 1957 தேர்தலிலேயே கேர ளத்தில் காங்கிரஸ் கட்சியை முறியடித்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசின் இந்தி மொழி திணிப்பு தமிழக மக்களிடம் குறிப்பாக மாணவர்களிடம் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் மக்கள் வறுமையில் வாடினார்கள். முதல்வராக இருந்த பக்தவச்சலம் மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்ன காலம் அது. அப்போதுதான் படி அரிசி திட் டத்தை அண்ணா அறிவித்தார். அது நிறைவேற்றப்படவில்லை என்பது வேறு விசயம்.

அன்று காங்கிரஸ் எதிர்ப்புக்கு செயல் வடிவம் கொடுப்பதாக கூட்டணி அமைந்தது. 1967இல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற் கடிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி உள் ளிட்ட பல்வேறு கட்சிகள் தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட்டன. இதன் காரணமாக, திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், காங்கிரஸ் எதிர்ப்பில் திமுக உறுதியாக நிற்கவில்லை. அண்ணா அவர்களின் மறைவைத் தொடர்ந்து கலைஞர் முதல்வரான நிலையில்,

1971 தேர்தலில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதில் இடம்பெறவில்லை என்பது மட்டுமல்ல, இண்டிகேட் , சிண்டிகேட் நாட்டின் சாபக் கேடு என்ற முழக்கத்துடன் தனியாகப் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததன் விளைவை தமிழகம் மட்டு மல்ல, திமுகவும் அனுபவிக்க நேர்ந்தது. அவசரநிலை காலத்தின்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டதோடு திமுகவினர் சிறை கொட்டடியில் பல்வேறு சித்ர வதைகளை அனுபவிக்க நேர்ந்தது. சிட்டிபாபு கொல்லப்பட்டார். சாத்தூர் பாலகிருஷ்ணன் சிறைக் கொடுமையால் இறந்தார். ஆற்காடு வீராசாமி மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதலால் அவர் கேட்கும் திறனை இழக்க நேர்ந்தது.

இன்றைக்கு தளபதி என்றழைக்கப்படும் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் ஆகியோர் சிறையில் கொடூர மான தாக்குதலுக்கு ஆளானார்கள். இந்த விபரங்களை பழைய முரசொலி ஏட்டைப் படித்தால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் அவசர நிலைக்கால அட்டூ ழியத்தை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சி யுடன் அதன்பின்பும் கூட்டணி சேர திமுக தயங்கியது இல்லை. 1990களில் தாராளமயமாக்கல் கொள் கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாநிலத்தில் ஆட்சி நடத்தியபோது அதே கொள்கைகளைத்தான் பின்பற்றின. காங்கிரஸ் பிஜேபி ஆகிய இரு கட்சிகளுடனும்மாறி மாறி கூட்டு வைக்க திமுக தயங்க வில்லை. அதிமுக எதிர்ப்பு என்ற ஒரேநோக்கத்துடன் திராவிட இயக்க கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான பாஜகவுடன் சேர்ந்து கொண்டு மத்தியில்பதவி பெறத் தயங்கவில்லை.

வாஜ் பாய்க்கு ஜென்டில்மேன் பட்டம் கொடுக்க கூச்சப்படவில்லை. குஜராத்தில் சிறு பான்மை இஸ்லாமிய மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, அது வேறு மாநிலப்பிரச்சனை என்று கண்ணை மூடிக் கொள்ளமுடிந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த நிலையில் மீண்டும் காங்கிரசுடனும் சேர முடிந்தது. பட்டியலை எடுத்துக் காட்டி வலுவான இலாக்காக்களை பெற வாதிட முடிந்தது. நீரா ராடியா டேப்உரையாடலை கேட்டால் இதையெல்லாம் புரிந்து கொள்ளமுடியும்.அதிமுக மீது இன்று முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் திமு கவுக்கும் அப்படியே பொருந்தும். சட்டமன்ற ஜனநாயக மறுப்பு, ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் என இரண்டுகட்சிக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை தான். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங் களை கதி கலங்கவைத்த வெள்ள சேதத் திற்கு உடனடிக் காரணம் அதிமுக என்றால்நீடித்த நிலைத்த காரணமாக இருப்பதுஇந்த இரு கட்சிகளும்தான். ஆக்கிரமிப்பு கள் ஒரே நாளில் நடந்து விடவில்லை.

முந் தைய திமுக ஆட்சியிலும் ஆள்வோரின் ஆசியோடு ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டுதான் இருந்தன. ஊழல் என்று எடுத்துக் கொண்டாலும் ,இரு கட்சிகளும் ஒருவருக் கொருவர் சளைத்தவர்கள் அல்ல. சொத்துக் குவிப்பு வழக்கு இப்போது அதிமுக தலைமை மீது நடந்து கொண்டிருந்தாலும் சர்க்காரியா கமிஷன் துவங்கி, அலைவரிசைக் கற்றை ஊழல் வரை திமுகவுக்கும் நெடிய வரலாற் றுப் பாரம்பரியம் இருக்கிறது. கேரளம், மேற்கு வங்கத்தில் இடதுசாரி கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளனர். திமுக, அதிமுக போன்று இடதுசாரிகள் மீதுஊழல் குற்றச்சாட்டுகள் உண்டா? இப்போ தும் திரிபுராவில் இடது முன்னணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் மீதோ அமைச்சர்கள் மீதோ சொத்துக் குவிப்பு வழக்கு உண்டா? இல்லையே. ஆனால் ஊழல் சேற்றில் விழுந்து புரள் வதில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையில் வேறுபாடு இல்லை. எனவே தான் இடதுசாரி கட்சிகள் இரண்டு கட்சிகளும் எதிர்க்கப்பட வேண்டியவை என்றுமுடிவு செய்துள்ளன. பீகாரில் அண்மை யில் நடந்த தேர்தலில் வருந்தி , வருந்திஅழைத்தும் காங்கிரஸ் இருந்த கூட்ட ணியில் இடதுசாரிகள் சேரவில்லை. இடது சாரி கட்சிகள் அனைத்தும் தனியாகப் போட்டியிட்டன.மாநிலத்தில் நீண்ட காலம் திமுக ஆட்சியில் இருந்துள்ளது. மத்தியிலும் மாறி மாறி அதிகாரத்தை ருசித்துள்ளது. இதனால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலனடைந்திருக்கலாம். தமிழ், தமிழகம் ,தமிழர்கள் கண்ட பலன் என்ன? மாநில சுயாட்சி கேட்ட கட்சியால் மாநில உரிமை களை பாதுகாக்க முடிந்ததா?ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீக்கப் படாததில் மோடி அரசுக்கு முக்கியப் பொறுப்பு உண்டு. 2014ஆம் ஆண்டி லேயே தடை விதிக்கப்பட்ட நிலையில் 18 மாத காலமாக நாடாளுமன்றத்தில் மசோதாகொண்டு வந்து தடையை நீக்க முயலா மல் கடைசி நேரத்தில் அரசாணை நாடகம்நடத்தியது மோடி அரசு. அதைக் கூட கண்டிக்காமல் மத்திய பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதாக நினைக்கவில்லை என்று கலைஞர் பதில் அளிப்பதன் நோக் கம் என்ன?திமுக பின்பற்றிய மொழிக் கொள்கை யால் தமிழுக்கு கிடைத்த லாபம் என்ன? ஆங்கிலம்தானே வளர்ந்துள்ளது. மத்திய ஆட்சிப் பொறுப்பில் திமுக இருந்தபோது உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர முடிந்ததா? மத்தியஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும்மாற்ற முடிந்ததா? மொழிப் போர் தியாகி கள் வீர வணக்க நாள் என்பது ஒரு சடங் காக மட்டும் தானே கடைப்பிடிக்கப் படுகிறது. திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்த போதும் தமிழகத்தில் கூட தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காமல் போனது ஏன்? சிகை அலங்காரம் செய்து வந்த மாசிலாமணியை சலவைத் தொழிலாளி யான சி.ஆர். கோலப்பனை, ஆதி ஆந்திரரான எலமந்தாவை மேலவை உறுப்பின ராக்கியது யார்? திராவிட இயக்கம் அல்லவா? என கேள்வி எழுப்புகிறார் திருநாவுக் கரசு. உண்மைதான். ஆ.ராசாவை மத்திய அமைச்சராக்கியதை ஏன் குறிப்பிடவில்லை. அலைவரிசை மறைக் கிறதா? தாமிரபரணி, இ.கோட்டைப்பட்டி யில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது திமுக ஆட்சியில்தான். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய நேரடி களஆய்வில் தமிழகத்தில் இன்னமும் 89 வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை நீடிப்பதாகவும் தலித் மக்களுக்கு எதி ரான வன்கொடுமைகள் 28 விதமாகநீடிப்பதாகவும் தெரிய வந்ததே. இதற்கு ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட திமுகவும் பொறுப்பேற்க வேண்டாமா?தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவக் கொலைகளைஎதிர்த்து திமுக நடத்திய போராட்டம் எத்தனை ?முந்தைய சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை, பெரியாரின் வழியை திமுக கைவிட்டு நெடுநாள் ஆகிறது. பழைய பெருங்காய டப்பாவை உருட்டு வதால் எந்தப் பயனும் இல்லை.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்கத்தா பிளீனத்தை தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளை மேற்கோள் காட்டி திருநாவுக்கரசு கட்சிக்கு இலவச உபதேசம் செய்துள்ளார். தவறை ஒத்துக் கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஒருபோதும் தயங்கியதில்லை. சுய விமர் சனம், விமர்சனம் என்பது கம்யூனிஸ்ட்டு இயக்கங்களின் சொத்து. இந்த விசயத்தில் திமுகவிடம் பாடம் கற்கும் நிலையில் நாங்கள் இல்லை. நமக்கு நாமே பயணத்தின் போது திமுக ஆட்சியில் நடந்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறினாரே அது எந் தெந்த தவறு என்று விளக்கத் தயாரா?அப்படி பட்டியல்போட்டால் முரசொலியில் தொடராக அல்லவா வெளியிட வேண்டியிருக்கும்.தலித்துகள், பெண்களை சேர்ப்பதுகுறித்து இப்போது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசுவதாக கட்டுரை யாளர் கூறுகிறார். ஒருவேளை இவருக்கு தெரியாமல் இருக்கலாம். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்க ளின் உரிமைக்காக செங்கொடி இயக்கம் ஆற்றிய பணியை, செய்த தியாகத்தை அதே மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைவர் அறிவார். கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக முன்னின்று போராடிக் கொண்டிருப்பது கம்யூனிஸ்டு கள் தான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.கம்யூனிஸ்ட்டு இயக்கத்தின் பெண் களின் பங்கு மகத்தானது. சிட்டகாங் வீராங்கனை கல்பனா தத் துவங்கி கே.பி.ஜானகி யம்மாள், பாப்பா உமாநாத், அகல்யா ரங்கனேக்கர், விமலா ரணதிவே என நீண்ட பட்டியல் அது. வீராங்கனை லீலாவதியின் தியாகத்தை தமிழகமும் அறியும். திமுக வும் அறியும். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண் களை கட்சியில் மேலும் அதிகமாக சேர்க்கவேண்டும் என்பதன் பொருள் இதுவரை இல்லை என்பதல்ல. பெரியாரின் பெண்ணு ரிமை கருத்துக்கும் இன்றைய திமுகவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? பெண்களை சட்ட சபை தொடங்கி பொதுக் கூட்ட மேடை வரை இழிவுப்படுத்தி வந்துள் ளதற்கு ஏராளமான உதாரணங்களைக் காட்ட முடியும்.தமிழகத்தின் பல்வேறு சீரழிவுகளுக்கு காரணமான அதிமுக , திமுக ஆகிய இரண்டையும் நிராகரித்து புதிய கொள்கைப் பூர்வ அரசியல் மாற்று உருவாகவேண் டும் என்பது தமிழக மக்களின் விருப்பம். இடதுசாரிகளின் திட்டம். அதன் விளைச்சல் தான் மக்கள் நலக் கூட்டணி. இது முகாரி அல்ல, உதய கால பூபாளம் என்பதை காலம் உணர்த்தும்.

Leave a Reply

You must be logged in to post a comment.