நாகப்பட்டினம், ஜன.12-

மயானத்திற்குப் பாதை கேட்டுப் போரா
டிய தலித் மக்கள் மீது, காட்டுமிராண்டித் தன
மாகத் தாக்குதல் நடத்திய காவல்துறை
யைக் கண்டித்து, மயிலாடுதுறை, வரு
வாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறைக்கு அருகே, குத்தாலம் ஒன்றியம், வழுவூர் ஊராட்சியைச் சேர்ந்த
திருநாள் கொண்டச்சேரியில் செல்ல
முத்து என்ற தலித் முதியவர் (85) ஜனவரி
-3 அன்று இறந்தார். இந்த கிராமத்திலி
லிருந்து மயானம் செல்ல 3 கி.மீ.தூரம் கட
லாழி  என்னும் ஆற்றங்கரைக்கு உடலை
எடுத்துச் செல்லவேண்டும். பொதுப்பாதை வழியாக இறந்தவரின் உடலை தலித் மக்
கள் எடுத்துச் சென்ற போது, வழுவூர் சாதி ஆதிக்கச் சக்தியினர் தடுத்து விட்டனர்.
இந்நிலையில், செல்லமுத்துவின் பேரன் கார்த்திக், சென்னை உயர்நீதி மன்றத்தில் இப்பிரச்சனை சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்தார். பொதுவழியில் உடலை எடுத்துச் சென்று பிரச்சனையைத் தீர்வு காணுமாறு உயர்நீதி மன்றம், நாகை
மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறைக்
கும் உத்தரவிட்டது.
ஆனால், 3 நாட்கள் போராட்டம் நடந்த
பின்னர், ஜனவரி-6 அன்று காவல்துறை, தலித் மக்களிடம், நீங்கள் பொதுவழியே எடுத்துச் செல்லலாம் என்று வஞ்சகமாகப் பேசினர். அதனை நம்பி, இறந்தவரின் உடலைப் பாடையில் வைத்து எடுத்துச் செல்லும்போது, காவல்துறையினர் திடீரெனக் காட்டுமிராண்டித் தனமாக தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியும் பலரைக் கைது செய்தும், வன்முறையுடன் பாடையைக் கைப்பற்றி, மயானத்திற்கு எடுத்துச் சென்று புதைத்து விட்டனர்.
தலித் மக்கள் மீது கொடிய முறையில் தாக்குதல் நடத்திய காவல்துறையினர், தலித் மக்களுக்கு அநீதி இழைத்த மாவட்ட
நிர்வாகம் ஆகியவற்றைக் கண்டித்து மயி
லாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தீண்
டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலைமை வகித்தார்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.வி.
முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் வி.
மாரிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி
யின் மாவட்டச் செயலாளர் நாகைமாலி எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.கலைச்செல்வி, ஜி.
ஸ்டாலின், கோவை.சுப்பிரமணியன், பி.
சீனிவாசன், குத்தாலம் ஒன்றியச் செயலா
ளர் எஸ்.துரைராஜ், மயிலாடுதுறை வட்டச் செயலாளர் எம்.மணி, சி.ஐ.டி.யு.மாவட்டச் செயலாளர் சீனி.மணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், நிறைவுரையாற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: