தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.இது ஜல்லிக்கட்டு ஆர்வலர் கள் மத்தியில் மட்டுமின்றி தமிழக மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியையும் மத்திய, மாநில அரசு கள் மீது கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க மத்தியிலிருந்த மோடி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன விலங்கு காட்சிப் பட்டியலிலிருந்து காளையை நீக்கு வதற்கு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தால் இப்போது இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பலனளிக்கும் பல மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிய மோடி அரசு தமிழக மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஜல்லிக்கட்டு போட்டிதடையின்றி நடைபெற எந்த முயற்சியும் எடுக்க வில்லை. நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத் தொடரி லாவது மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி யிருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் அறுவடையை கருத்தில் கொண்டு அரசு அறிவிக்கை ஒன்று வெளி யிடப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படாது என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. அது இப்போது உண்மையாகி விட்டது. ஆனால் அரசு அறிவிக்கை வெளியிட்டதையே மோடி அரசின் சாதனை என்றும்,

தங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் குதியாட்டம் போட்டனர் பாஜகவினர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு மோடி பெயரைசூட்டவேண்டும் என்று கூறும் அளவிற்குச் சென்றனர். அரசு அறிவிக்கை போதுமானது அல்ல, அவசரச்சட்டம் கொண்டு வந்தால்தான் இந்த ஆண்டு போட்டியை இடையூறின்றி நடத்த முடியும் என்று சட்ட நிபுணர்களும், மக்கள் நலக் கூட்டணி தலை வர்களும் சுட்டிக் காட்டினர். விவசாயிகளின் நிலத் தைப் பறிப்பதற்கு மீண்டும் மீண்டும் அவசரச்சட்டம் கொண்டு வந்த மோடி அரசு ஜல்லிக்கட்டு போட்டித் தொடர அவசரச் சட்டம் கொண்டு வரத் தயாராக இல்லை.‘கேவியட்’ மனு தாக்கல் செய்ததோடுதனது கடமை முடிந்துவிட்டதாக தமிழக அரசும்கருதி பேசாமல் இருந்துவிட்டது. வழக்கு விசாரணை வரும் போது மாநில அரசின் கருத்தைஅறிய வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.

இறுதித் தீர்ப்பின் போது இது பொருந்துமே யன்றி, இடைக்காலத் தடை விதிப்பதை இதன் மூலம்தடுக்க முடியாது என்பதை தமிழக அரசு முன்னு ணர்ந்திருக்க வேண்டும்.விலங்குகள் நல வாரியத்தின் கருத்தினை ஏற்று இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் போட்டி தொடர வேண்டும் என வலியுறுத்துவதையும், மக்களின் உணர்வையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறு வது மீண்டும் கேள்விக் குறியாகி உள்ளது. விலங்குகள் வதைக்கப்படுவதாக யூகத்தின் அடிப்ப டையில் முன்வைக்கப்படும் வாதத்தை ஏற்பது என்பதுபல்வேறு வகையான விபரீதங்களுக்கு இட்டுச் செல்லும். இதைப் பயன்படுத்தி மக்களின் உணவுப் பழக்கத்தைக் கூட சிலர் குலைக்கக்கூடும். உச்ச நீதிமன்றம் கவனமாகக் கையாள வேண்டிய வழக்கு இது.

Leave A Reply

%d bloggers like this: