லக்னோ, ஜன. 12-

உத்தரப்பிரதேசத்தில் சென்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது முசாபர்நகரில் முஸ்லிம்மக்களுக்கு எதிராக மதவெறிக்கலவரங்களை ஏற்படுத்தியதைப்போல, இப்போது வரும் 2017 சட்டமன்றத் தேர்தலின் போதும் மதவெறிக் கலவரங்களை உருவாக்க விசுவ இந்து பரிசத் திட்டமிட்டு வருகிறது. லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய விசுவ இந்து பரிசத் செய்தித்தொடர்பாளர் சரத் சர்மா, “விஎச்பி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் ராமர் கோவிலைக் கட்டத் தீர்மானித்திருக்கிறோம்,’’ என்றார். ஏப்ரல் 15 – ராம நவமி – தினத்திலிருந்து ஒவ்வொரு கிராமத்திலும் ராமர் வழிபாடு நடக்கும். இதேபோல் 1 லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்; இக்கிராமங்களில் ராமரை வழிபட்ட பிறகு ராமர் சிலை அல்லது படம் அங்கே நிரந்தரமாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். பாபர்மசூதி இருந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டும் பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதிலும், சட்டமன்றத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் மதக் கலவரங்களைத் தூண்ட விஎச்பி இவ்வாறு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. (பிடிஐ)

Leave A Reply