விருதுநகர், ஜன.8-

image4237காங்கிரஸ் அரசை விட மாணவர்களின் கல்விக்கு குறைந்த நிதி ஒதுக்கீடுசெய்யும் பாஜக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்று இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.சிவதாசன் கூறினார்.விருதுநகரில் இந்திய மாணவர்சங்கம் சார்பில் மாநில சிறப்பு மாநாடுவியாழக்கிழமை நடைபெற்றது. அதில்கலந்து கொண்ட அகில இந்தியதலைவர் முனைவர் வி.சிவதாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போதுகூறியதாவது:கல்வி வியாபாரத்திற்கு, கல்வி காவிமயத்திற்கு, கல்வியை மத்தியத்துவப்படுத்தும் பாஜக அரசுக்கு எதிராக வரும் ஜனவரி 22-24 வரை ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் அகிலஇந்தியமாநாடு நடைபெற உள்ளது. இதில்இந்தியா முழுவதிலுமிருந்து 650 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

ஆசிரியர், மாணவர்களை சீரழிக்கும்வகையில் புதிய கல்விக் கொள்கைஉள்ளது. இதை அமல்படுத்த பாஜகஅரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்தகாங்கிரஸ் ஆட்சியில் கல்விக்கு நிதிகுறைவாகவே ஒதுக்கப்பட்டது. ஆனால்அதைவிட பாஜக ஆட்சிக்கு வந்தவுடன்குறைத்துவிட்டது. இதனால், ஏழை,எளிய மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கல்விக்கான நிதி குறைப்புக்குநிதிப்பற்றாக்குறையை மத்திய அரசு காரணம் கூறுகிறது. ஆனால், உண்மையில்நிதி தாராளமாய் அரசிடம் உள்ளது. பெட்ரோல் உட்பட அனைத்துப்பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வரிவிதிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும்ஒரு சிறுபகுதி வருவாயைக் கூட கல்விக்குசெலவிட பாஜக அரசு மறுக்கிறது.அதே நேரத்தில், பிரதமர் மோடிரூ.20 லட்சம் செலவில்உடை அணிகிறார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவந்தபோது, அவரது மனைவிக்கு ரூ.2 கோடி மதிப்பில் 100 சேலைகளை நரேந்திரமோடி வழங்கியுள்ளார். இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களான அதானிக்கும் அம்பானிக்கும்மானியமாக பணத்தை வாரியிறைக்கின்றனர். இதற்கெல்லாம் எப்படி நிதி வந்தது.

இது ஏழை – எளிய மக்களின் வரிப் பணம். இந்தியாவில் ஏராளமான அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதி கூடமுழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. குஜராத் மாநிலபள்ளிப் பாடப் புத்தகங்களில்ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகள் திணிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, “உங்களுக்கு பிறந்த நாள்என்றால், கேக்வெட்டாதீர்கள், மெழுகுவர்த்திகளை ஏற்றாதீர்கள்“ அது மேற்கத்திய கலாச்சாரமாகும். அதற்கு பதிலாகபிறந்த நாளின் போது காயத்ரி மந்திரத்தை மட்டுமே உச்சரியுங்கள் எனவும்,உங்களது குழந்தை நல்லவராகவர வேண்டுமானால், ஆர்எஸ்எஸ்க்குஅவர்களை அனுப்பி வையுங்கள் எனவும் அந்த பாடத்தில் உள்ளது.

இந்தபாடப் புத்தகத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி முன்னுரை எழுதியுள்ளார்என்பது கவனிக்கத்தக்கது.அதேபோல், அம்பானியின் மருத்துவமனையை திறப்பு நிகழ்வில், ‘பிளாஸ்டிக் சர்ஜரி நமது பாரம்பரியம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பேநமது முன்னோர்கள் அதை கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் விநாயகரின் தலை யானையாகவும், உடல் மனிதனாகவும் உள்ளது என மோடி பேசியுள்ளார்.மதச்சார்பின்மையையும், அறிவியல்வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக கொண்டுசெயல்படுவது பிரதமரின் பொறுப்பு. ஆனால், பிரதமர், விஞ்ஞானத்திற்குபுறம்பாகவே பேசி வருகிறார்.

இதுநாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும். தமிழகத்தில் உள்ள ஐந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம்காலியாக உள்ளது. அதேபோல் ஒடிசாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியர் கூட பணியில் இல்லை. துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், உயர் கல்விபடிக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. 2 ஆயிரம் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்என அதிமுக தேர்தலின்போது உறுதிஅளித்தது.ஆனால், அதை கண்டுகொள்ளவில்லை. உதவி பேராசிரியராக பணியில் சேர ரூ.15 லட்சம் முதல் 30லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை தமிழகத்தில் உள்ளது.4,500 ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடத்திற்காக பல கோடி ரூபாய் அதிமுகவினர் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கோவை அவிநாசிமனையியல் பல்கலைக்கழகத்தை தன்னாட்சியாக மாற்றக் கூடாது. தன்னாட்சியாக மாற்றினால், மாணவர்களுக்கான கல்விகட்டணம் பல மடங்குஉயரும்.கல்வி உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

பேராசிரியர்கள்சம்பளம் குறைய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம்அரசுப் பள்ளிகளில் 15 ஆயிரம் பள்ளிகள் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளாக உள்ளன. இதில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில்பணிபுரிகின்றனர். இதன் காரணமாக 70 மாணவர்கள் உள்ள பள்ளிகளிலும்ஓராசிரியரே உள்ளனர். இந்த ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை மாற்றவேண்டும். தமிழக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளில் பள்ளி கல்விக்காகரூ. 60 ஆயிரம் கோடி ஒதுக்கியதாக கூறுகிறது. இதில் மாணவர்களுக்காக இலவச பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்குதேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இச்சந்திப்பின்போது, மாநில செயலாளர் பி.உச்சிமாகாளி, மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் கே.எம்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர்சிவதாசன் விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கர்மவீரர்காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். பின்பு, அங்கிருந்து பிரதிநிதிகள் அனைவரும் பேரணியாக தெப்பம் தெற்கு பஜார், தெற்குரதவீதி, பிள்ளையார் கோவில் தெரு, முத்துராமலிங்கம் நகர் வழியாக விருதுநகர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்திற்கு சென்றனர். அங்கு நடைபெற்ற சிறப்பு மாநாட்டிற்கு, வீ.மாரியப்பன் தலைமைதாங்கினார். அஞ்சலி தீர்மானத்தைமாவட்டச் செயலாளர் கே.எம்.பாரதிமுன்மொழிந்தார். அகில இந்திய தலைவர் சிவதாசன் துவக்கவுரையாற்றினார். பேராசிரியர் பி.ராஜமாணிக்கம், மாநிலசெயலாளர் பி.உச்சிமாகாளி ஆகியோர்சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலதுணைச்செயலாளர் டி.சித்தார்த்தன், மாவட்டத்தலைவர் ரஞ்சித் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். (ந.நி.)

Leave A Reply