கோயம்புத்தூர், ஜன.8

தனியார் வேலைவாய்ப்பு முகாம்அரசுத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல், அரசு செலவில் தனியார் துறைக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தமிழக அரசு நாடகமாடுகிறது என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.கோவையில் சிஐடியு மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கத்தின் மாநி லத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறுகையில்: தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லட்சம் சிறு, குறு தொழில்கள் அழிந்துவிட்டன. இத்தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் வங்கிக்கடன், மின்சாரக் கட்டணம், வரி உள்ளிட்டவற்றை ஓராண்டு காலம் சலுகையில் வழங்க வேண்டும். சிறு, குறு தொழிலாளர்களின் வங்கி கடன்களில் தளர்வும், மீண்டும் தொழில் துவங்க மத்திய, மாநில அரசு மானியம் வழங்க வேண்டும். சென்னை, கடலூர் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தூய்மைப் படுத்தும் பணியில் வெளி மாவட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்கு எத்தகைய அடிப்படை வசதிகளும் சரிவர செய்து கொடுக்காததால் கடுமை யாக பாதிக்கப்பட்டனர்.

மேலும், அத்தொழிலாளர்களுக்கு தருவதாக ஒப்புக் கொண்ட ஊதியத்தை கூட அளிக்காமல் தமிழக அரசு ஏமாற்றி வருகிறது.மேலும், இலங்கை அரசு தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கடுமையான போக்கினை கடைப்பிடித்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதற்கு நிரந்த தீர்வு ஏற்பட, இருநாட்டு மீன வர்களையும் அழைத்துப் பேசி மீன்பிடிக்கும் எல்லையை வரையறுக்க வேண்டும்.இதேபோல், அரசுத் துறைகளில் மட்டும் சுமார் 5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது தனியார் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அரசு செலவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது.

அந்தெந்த அமைச்சர்கள் அவரவர் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி விட்டு, இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் கவனம் செலுத்தலாம். தனியார் வேலைவாய்ப்பு முகாம் எனும் பெயரில் நாடகத்தை தமிழக அரசு அரங்கேற்றுகிறது.மேலும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் பணி நியமனத்தை நீக்க வேண்டும். தனியார் துறையில் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை 180 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் குளம், குட்டைகளை தூர்வார நடவடிக்கை வேண்டும் என்பன உட்பட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்.11ம் தேதி தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலர் பிறந்தநாளில் தமிழகத்தில் ஆயிரம் தெருமுனைக் கூட்டம் நடத்துவது, 10 லட்சம் நோட்டீஸ் விநியோகம் செய்வது எனத் திட்டமிட்டுள்ளோம். மேலும், கூலி உயர்வுக்கோரி உயிர் நீத்த விவசாய தொழிலாளர்களின் நினைவாக, வரும் ஜன. 19ம் தேதி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தி சபதம் ஏற்கும் நாளாக அனுசரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியின்போது, சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் அருணகிரிநாதன், கட்டிட சங்க மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: