கோவை, ஜன. 8-

சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்கோவை கேஎம்சிஎச்மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.கரூர் மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர்தங்கவேல். இவர் பரமத்திவேலூரில் உள்ள அரசுவிடுதியில்சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருத்திகா. இவர்களின் மகள் ஜனஸ்ருதி. ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2-ம் தேதி சிறுமியை பள்ளியில் விட கிருத்திகா, இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.அப்போது ஏற்பட்ட சாலைவிபத்தில் இருவரும் பலத்தகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக சிறுமிகவலைக்கிடமான நிலையில்கோவைமெடிக்கல் சென்டர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 6ம் தேதி சிறுமி ஜனஸ்ருதிமூளைச் சாவுஅடைந்தார். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

இதன்படி கோவைஅரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் கேஎம்சிஎச்மருத்துவ குழுவினர் தலைமையில் சிறுமியின் 2 சிறுநீரகம்,2 கண்கள்,கல்லீரல் மற்றும்இதய வால்வுகள்ஆகியவைதானமாக அளிக்கப்பட்டன.ஒருசிறுநீரகம் கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கும்,மற்றொருசிறுநீரகம் சென்னை போர்டீஸ்மருத்துவமனைக்கும், இரு கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், கல்லீரல்சென்னை அப்பல்லோமருத்துவமனைக்கும், இதய வால்வுகள்,மெட்ராஸ்மெடிக்கல்மிஷன்மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: