கல்வி நிறுவனங்களில் பொறுப்பிலுள்ளோரின் செயல்முறையைப் பொறுத்து அவர்களை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி மாணவர்களும் ஆசிரியர்களும் பணியாளர்களும் போராடிய செய்திகள் வந்துள்ளன. அனைவரது மதிப்பைப் பெற்றவர்கள் காரணமின்றி விலக்கப்படுகிறபோது அவர்களை அதே பொறுப்பில் நீட்டிக்கக் கோரும் போராட்டங் களும் நடந்ததுண்டு. ஒரு கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு ஒருவர் வருகிறபோதே எதிர்ப்புக் கிளம்பியது புனேயில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவன (எப்டிஐஐ) தலைவர் நியமன விவகாரத்தில்தான்.சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் கஜேந்திர சவுஹான். 2014ஆம் ஆண்டி லிருந்து காலியாக விடப்பட்டிருந்த எப்டிஐஐ தலைவர் பதவிக்குப் பொருத்தமானவரை நியமிக்க வேண்டும் என்று கோரப்பட்டு வந்தது. இன்னார் நியமிக்கப்படலாம் என்று சிலரது பெயர்கள்சுற்றிவந்தன.

image4186ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் சவுஹான் பெயரை மத்திய செய்திஒலிபரப்புத் துறை அறிவித்தபோது அது மாணவர் களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதுமே திரைக்கலைக் கல்வித்துறையினரிடையே மட்டுமல்லாமல், பெரிய திரை – சின்னத்திரை இரு பிரிவுகளை சார்ந்தவர்களிடையேயும் சமூக அக்கறை யுள்ள திரைப்படத் திறனாய்வாளர்களிடையேயும் கூட இது கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.எதிர்ப்புக்குக் காரணம் தொலைக்காட்சி நடிகர்இப்பொறுப்புக்கு வருவதா என்பதல்ல. கலைத் துறை சார்ந்த கல்விச் சிந்தனைகளிலோ, அது தொடர்பான விவாதங்களிலோ, திறனாய்வுக் களங் களிலோ எவ்விதமான பங்களிப்பும் இல்லாதவர் அவர்.

இதற்கு முன் தலைவர்களாக இருந்த அடூர் கோபாலகிருஷ்ணன், சியாம் பெனகல், கிரிஷ் கர்னாட், யு.ஆர்.அனந்தமூர்த்தி, சலில் அக்தர் மிர்ஜா ஆகியோர் சிறந்த கலைப்படைப்பாளிகளாகவும் கலை இலக்கியம் குறித்த வரலாற்றுப் பார்வை கொண்டவர்களாகவும் அறியப்பட்டவர்கள். சவு ஹானுக்கு உள்ள ஒரே தகுதி அவர் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக உறுப்பினராக இருக்கிறார் என்பதே.எப்டிஐஐ வளாகம் முந்தைய தலைவர்களின் வழிகாட்டலில் உலக அளவில் பேசப்படுகிற சிறப்பான திரைப்படங்களை உருவாக்கியவர்களை உருவாக்கிய பெருமைக்குரியது. அதன் மாணவர்கள் இயக்கிய குறும்படங்களும் ஆவணப்படங்களும் இந்தியச் சமுதாயத்தின் பொருளாதார ஏற்றத் தாழ்வு, சாதியம், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்டஅவலங்களைப் பேசியிருக்கின்றன.

அதற்குக் காரணம், தொழில்நுட்பப் பயிற்சிகளோடு நின்று விடாமல், ஆரோக்கியமான விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் மேடையமைத்துக் கொடுக்கப்பட்டதேயாகும். அந்த வாய்ப்புகளை அடைக்கப் பட்டுவிடுமோ என்ற அச்சம் நியாயமானது. கல்விநிறுவனங்களை இந்துத்துவ கூடாரத்தின் பிடியில்சிக்கவைக்கிற திட்டத்தின் மற்றொரு நடவடிக்கை யாகவே இதைக் காண வேண்டியுள்ளது.யார் நியமிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி மாணவர்களுக்கு என்ன கவலை, அவர்களுடைய வேலை படிக்க வேண்டியதுதானே என்று மிக எளிதாக இதைத் தள்ளிவிட ஆளுங்கட்சியினர் முயல்கிறார்கள். ஆனால், இது அப்படி தள்ளப் படக்கூடிய எளிய பிரச்சனை அல்ல. பண்பாட்டுத் தளத்தில் தொடுக்கப்படுகிற தாக்குதலுக்கான எதிர்ப்பே இது. ஆகவேதான், சவுஹான் பதவியேற்பையொட்டி போராட்டம் நடத்திய மாணவர் களுக்கு ஆதரவுக் குரலும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் கண்டனக் குரலும் நாடெங்கும் உரத்து ஒலிக்கின்றன.

Leave A Reply