இராமேஸ்வரம், நவ.26 –

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 15 பேரை, வியாழக்கிழமையன்று இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
இந்த 15 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.சிறைப்பிடிக்கப்பட்ட 15 மீனவர்களில், 11 பேர் இராமேஸ்வரத்தையும், 4 பேர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தையும் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், அவர்களில் இராமேஸ்வரம் மீனவர்களை தலைமன்னாருக்கும், ஜெகதாப்பட்டினம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கும் இலங்கை படையினர் கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப்பின், 6 பேரை மட்டும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டிசம்
பர் 10-ஆம் தேதி வரை, மீனவர்களை சிறையில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சம்பவத்தையும் சேர்த்து, நவம்பர் மாதத்தில் மட்டும் 5-ஆவது முறையாக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.