திருநெல்வேலி, நவ. 26 –

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் சிஐடியு பீடித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பீடி கம்பெனிகள் பீடித்தொழிலாளர்கள் 1000 பீடிசுற்ற தரமான இலை 700கிராம் வழங்க வேண்டும், பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் தொகை ரூ.4ஆயிரம் வழங்கிட வேண்டும், அலுவலக ஊழியர்களுக்கு 25 சதம் சம்பளம் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட வேண்டும், தொழிலாளர்களை பாதிக்கின்ற மோசமான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும், பீடித் தொழிலாளர்களுக்கு இந்தியா முழுவதும் ரூ.15 ஆயிரம் வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும், நெல்லை மாவட்டத்தில் பீடி தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் ரூ.12 உயர்த்தி வழங்க வேண்டும் என்றுமுத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அதை அமல்படுத்த ஏற்கனவே சென்னையில் அதிகாரிகள் உத்தரவிட்டும் பீடி கம்பெனிகள் அந்த உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க மறுத்து வருகின்றன எனவே சம்பளத்தை உயர்த்தி வழங்காத கம்பெனிகள் மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் முக்கூடல், ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.முக்கூடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க ஒன்றிய தலைவர் சூசை அருள் சேவியர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருணாசலம், கருப்பசாமி, இன்பராஜ், குரூஸ் முடியப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம்,ஒன்றிய பொருளாளர் பத்மநாபன், துணை செயலாளர் செந்தில்வேல் ஆகியோர் கண்டனஉரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் டி.சந்திரசேகர் நிறைவுரையாற்றினார். ஆலங்குளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க துணை தலைவர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். அருணாசலம்,சுப்பையா,லெட்சுமி,வெற்றிவேல்,சங்கரம்மாள்,வள்ளிமயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் ம.ராஜாங்கம் துவக்கி வைத்தார். சிபிஎம் தாலுகா செயலாளர்குணசீலன், சங்க தாலுகா செயலாளர் மகாவிஷ்ணு ஆகியோர் கண்டனஉரையாற்றினர்.பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு கற்பகவள்ளி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அய்யாதுரை, ஆதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஒன்றியச் செயலாளர் ஆரியமுல்லை, சிஐடியு கவுரவத்தலைவர் அப்பாதுரை, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் முருகேசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.ஆறுமுகம் நிறைவுரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.