பாலாசூர், நவ. 26-

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன்படைத்த ‘பிரித்வி 2’ ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத்தளத்தில் இருந்து- ‘பிரித்வி 2’ ஏவுகணை வியாழனன்று பகல்12.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. அப்போது அது குறிப்பிட்ட இலக்கை எட்டி வெற்றி பெற்றுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்தால் ஆன ‘பிரித்வி 2’ ஏவுகணை 500 முதல் 1000 கிலோ அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கிலோ
மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. ஏவுகணை கடந்த 2003-ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டது. எனினும் அவ்வப்போது இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டு, இதன் தொழில்நுட்பம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிலேயே கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி சந்திப்பூர் தளத்தில் இருந்து ஏவப்பட்டு, ‘பிரித்வி 2’ சோதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஏவப்பட்டு, சோதனை வெற்றிஅடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: