நியூயார்க், நவ.26-

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க, உலகில் உள்ள நினைவுச் சின்னங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து பிரச்சாரத்தை தொடங்கியது ஐ.நா. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தி வருகிறது. இதற்கான செயல்களில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தி உலகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமான நவ.25ந் தேதி உலகம் முழுவதும் தனது பிரச்சாரத்தை ஐ.நா . தொடங்கியது.பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க உலகம் முழுவதும் பேரணிகள், கால்பந்து போட்டிகள், பள்ளிகளில் விவாதங்கள், உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான நினைவுச் சின்னங்களை மின் விளக்குகளால் அலங்கரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் ‘ஆரஞ்ச் தி வேர்ல்டு’ என்ற பெயரில் தீவிர பிரச்சாரம் செய்ய ஐ.நா. நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.