சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்
புதுதில்லி, நவ.26-

அரசியல் சட்டத்தை கௌரவிக்கவும்  அதனை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின்  கனவை நனவாக்கவும் தனியார் துறையில் தலித்
மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடரின் முதல் இரண்டு நாட்களை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டதன் ஆண்டு விழாவாக கடைப்பிடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:-அரசியல் சட்டவிழாவை கொண்டாடுவதற்கு முழு அர்த்தம் கிடைக்க வேண்டுமானால் அதனை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் கனவை நனவாக்கிடவும் தனியார் துறையில் தலித்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஓதுக்கீட்டை அமல்படுத்த தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். ஏனெனில் பொதுத்துறையில் அவர்களுக்கான  இடஒதுக்கீடு சுருங்கி வருகிறது.  அதே போல் தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நிறைவேற்ற வேண்டும்.

நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் மதவாத பிளவுபடுத்துதல் குறித்து மாநிலங்களவையில் தீர்மானம் இயற்ற நோட்டீ° ஒன்றை அவைத்தலைவர் ஹமீது அன்சாரியிடம் அளித்துள்ளேன். இப்பிரச்சனை குறித்த ஒரு வரித்  தீர்மானமானது அவைத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவையானது அதிகரித்து வரும் சகிப்பின்மையை கண்டனம் செய்து ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும்.  வெறுப்பு பேச்சுகளுக்கும் மத
ரீதியான பிளவுபடுத்தல்களுக்கும்  முடிவு கட்டுவதை உறுதிப்படுத்த மத்திய அரசு சட்டமொன்றை இயற்ற வேண்டும். இவ்வாறு யெச்சூரி கூறினார்.  (பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.