புதுதில்லி,நவ.26-

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நாட்டின் மதச்சார்பின்மைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக பாஜக அரசு கருத்துக்களை வெளியிட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மதச்சார்பின்மைக்கு எதிரான தங்களது கருத்திற்கு, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரையும் துணைக்கு இழுத்துக் கொள்ளமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கொண்ட முயற்சிக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் 125ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 26 வியாழனன்று இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமாக நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது. இதை
யொட்டி மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளானநவம்பர் 26 அன்று மக்களவையில் சிறப்பு அமர்வாக துவங்கியது. நவம்பர் 27 வெள்ளியன்றும் இது தொடர்கிறது.

இந்த சிறப்பு அமர்வை துவக்கி வைத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அவரது பேச்சு, இந்திய அரசியல் சாசனத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிப் பதற்கு பதிலாக, இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதமாக விளங்கும் மதச்சார்பின்மையை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் கூடிய பேச்சாக அமைந்தது. மதச்சார்பின்மை என்றவார்த்தை நாட்டில் மிகவும்தவறாக பயன்படுத்தப்படு கிறது என்றும், இதனால்சமூகத்தில் பதற்றம் ஏற்படுகிறது என்றும் ராஜ்நாத் சிங் மனம்போன போக்கில் பேசினார். மேலும், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் மதச்சார் பின்மை என்ற பதத்தை சேர்ப்பது பற்றி டாக்டர் அம்பேத்கர் நினைத்ததே இல்லை. 1976 ஒரு திருத்தம் மூலமாகவே இது சேர்க்கப்பட்டது அரசியலமைப் புச்சட்டத்தின் 42வது திருத்தத்தின் மூலமாக முகப் புரையில் `சோசலிச’ என்ற பதமும் `மதச்சார்பற்ற’ என்ற பதமும் சேர்க்கப்பட்டன. இதை இப்போதுநாங்கள் ஆட்சேபிக்கவில் லை. நடந்த சம்பவம் நடந்துபோனவையாகவே மறந்துவிடுவோம். ஆனால் இந்த பதங்களை முகப்புரையில் சேர்ப்பதற்கான அவசியம் இல்லை. அதனால்தான் அம்பேத்கர் அதை நினைக்கவில்லை” என்று ராஜ்நாத் சிங் பேசினார்.அப்போது குறுக்கிட்டு பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூண கார்கே, “முகப் புரையில் இந்த வார்த்தை இந்தப் பதங்களை சேர்க்க ஆதரவு தெரிவித்தவர்தான் அம்பேத்கர். ஆனால் அப் போது நிலவிய சூழல் சாதகமாக இல்லாததால் அதைசெய்ய முடியாமல் போனது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.எனினும் மீண்டும் பேசிய ராஜ்நாத் சிங், “மதச்சார்பின்மை என்றவார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இந்த வார்த்தையால் சமூகத்தில் பதற்றம்உருவாகிறது. சமூக நல் லிணக்கத்தை கட்டிக்காக்க முடியாமல் போகிறது. இடஒதுக்கீடு விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. இதையெல்லாம் ஏற்கமுடியாது” என்று அராஜகமான முறையில் கருத்துக் களை முன்வைத்தார். அதேநேரத்தில், “அம்பேத்கரின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர் தான் பிரதமர் நரேந்திர மோடி” என்றும் ராஜ்நாத் சிங் கூறிக்கொண்டார்.

சோனியா காந்தி

இந்நிலையில் இந்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சியங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், அதை வரைவு செய்த போது பங்கேற் காதவர்கள் எல்லாம் இப்போது அதன் மீது பிரமாணம் எடுக்கிறார்கள், உரிமை கோருகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் தாங்களும் உறுதியாக இருப்பதாக பேசுகிறார்கள். இதைவிட நகைப்புக் குரியது வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறினார்.“அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் அதை அமல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் இறுதி பலன் மோசமாகவே இருக்கும் என்று அன்றைக்கே அம்பேத்கர் எச்சரித்துள்ளார். ஆனால் அந்த அம்பேத்கரை இப்போது அரவணைத்துக் கொண்டு அதே மோசமானவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள்” என்றும் சோனியா காந்தி பாஜகவை கடுமையாக சாடினார். முன்னதாக தொடக்க வுரை நிகழ்த்திய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், விமர்சனமும் எதிர்ப்புணர்வும் ஜன நாயகத்தின் அங்கம் என்றும் கூறினார்.இந்த விவாதத்தின் தொடர்ச்சி வெள்ளியன்றும் நடைபெற உள்ளது.அப்போதும் பாஜக மீதான கடும் எதிர்ப்புக்கருத்துக்கள் முன்வைக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(பிடிஐ)

Leave A Reply