இராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையும் தவறியுள்ளது. இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- இராமநாதபுரம் தாலுகா புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி மகள்ஷாலினி என்பவர் வன்னிக் குடி கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைசேர்ந்த முனியாண்டி மகன் சரவணன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.16.11.15 அன்று இருவரும் புத்தேந்தல் கிராமத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஆதிக்க சமூகத்தை சேர்ந்த சாதி வெறியர்கள் சரவணனைஅடித்து, உதைத்து இராமநாதபுரம் பி1 காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பின்பு காவல்துறையினர் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அப்பொழுது காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஷாலினி, நான் தான் சரவணனை அழைத்துப் பேசினேன். அவர்மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் காவல்துறையினர் ஷாலினியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, சரவணனை சிறையில் அடைத்தனர். அதன் பின்பு புத்தேந்தல் கிராமத்தின் சாதி ஆதிக்க வெறியர்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று குழுக்களாக பிரிந்து இரவு சுமார் ஒன்றரை மணி வரை ஷாலினியை மிரட்டியுள்ளனர். பின்பு, வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஷாலினியின் தந்தை சக்தியின் சம்மதத்துடன் சாதி ஆதிக்க வெறியர்களால் 22.11.15 அன்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவருகிறது. எனவே , இந்த சாதி ஆதிக்க கொலைக்கு காரணமான குடும்பத்தினர், சாதி ஆதிக்க பஞ்சாயத்தார், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கதவறிய இராமநாதபுரம் பி1 காவல்துறையினர் ஆகியோர் மீது விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: