ஆண்ட்ராய்ட் கிட்காட் மற்றும் லாலிபப் பதிப்புகள் வெளியான அதே வேகத்தில் தற்போது மார்ஷ்மெல்லோ என்று பெயரிடப்பட்டுள்ள இப்பதிப்பை கூகுள் ஆண்ட்ராய்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.முந்தைய பதிப்புகளில் உள்ள ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்திலும், கூடுதலாக ஒரு சில புதிய வசதிகளை இணைத்தும் இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மார்ஷ்மெல்லோஒவ்வொரு பதிப்பிற்கும் ஆங்கில அகர வரிசையில் உணவுப் பண்டத்தின் பெயரை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் முந்தைய பதிப்புகளான கப்கேக், டோனட், எக்லர், ஃபிரயோ, ஜிஞ்சர்பிரெட், ஹனிகோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லிபீன், கிட்காட், லாலிபப் வரிசையில் ஐரோப்பியக் கண்டத்தில் பிரபலமான மிட்டாயான மார்ஷ்மெல்லோ(ஆயசளாஅயடடடிற)வின் பெயரை இப்பதிப்பிற்கு சூட்டியுள்ளது ஆண்ட்ராய்ட். ஆண்ட்ராய்டின் 13வது மேம்படுத்தல் இதுவாகும். இதன் பதிப்பு எண் ஆண்ட்ராய்ட் 6.0.

புதிய வசதிகள்

கைரேகை வழி அனுமதி: லாலிபப் பதிப்பைப் போலவே ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்கும் கைரேகை வழி உள்நுழைதல் வசதி இந்த ஆண்ட்ராய்ட் 6.0 பதிப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது. இனி வெளிவரும் மொபைல்கள் அனைத்திலும் கைரேகை பதிவு செய்வதற்கான ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் சேர்க்கப்படவேண்டியது அவசியமாகியுள்ளது.அப்ளிகேஷன் அனுமதி: தற்போதுள்ள லாலிபப் பதிப்பில் அப்ளிகேஷன் பதியும்போது மட்டுமே அனுமதி கேட்கும்படி இருந்தது. இத்ப் பதிப்பில் ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் அனுமதி கேட்கும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த செட்டிங்ஸை தேவைப்பட்டால் நீக்கவோ சேர்க்கவே செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை:

பாதுகாப்பு அம்சங்களில் மிக முக்கியமான மற்றொன்று ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவதற்கு புதிய வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஆப்பிள் பே, சாம்சங் பே வசதிகளுக்கு இணையாக ஆண்ட்ராய்ட் பே வசதியை ஏற்கனவே இருக்கும் கூகுள் வாலட் வசதியுடன் இணைத்து உருவாக்கியுள்ளது. இவ்வசதி மூலம் பிரபலமாகவுள்ள அனைத்து வகை கிரெடிட் / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.பேட்டரி சேமிப்பு: லாலிபப் பதிப்பில் பேட்டரி சேமிப்பிற்கு சிறு வழிமுறையை அமைத்திருந்தது கூகுள். அதேபோல இப்பதிப்பிலும் அதற்கு ஒரு தீர்வை கொடுத்திருக்கிறது. பேட்டரியின் தீர்வதற்கு பொதுவான காரணம் அப்ளிகேஷன்களை அதிகமாக பயன்பாட்டில் இருப்பதுதான். அதுவும் நீங்கள் பயன்படுத்தாத நிலையிலும் அவை பின்புலத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதனை முந்தைய பதிப்புகளில் ஒவ்வொரு முறையும் நாமே மேனுவலாக அப்ளிகேஷன்களை நிறுத்த வேண்டியிருந்தது. இப்பதிப்பில் ஆட்டோமேட்டிக்காக பயன்படுத்தாத ஆப்ஸ்களை நிறுத்த ஒரு ஆப்ஸை கூகுள் இணைத்துள்ளது.அத்துடன், பேட்டரி விரைவாக சார்ஜ் செய்வதற்கென்று ஒரு ஆப்ஸ் ஒன்றையும் கூடுதலாக தந்திருக்கிறது. இந்த பேட்டரி சேவர் அப்ளிகேஷன் குரல்வழி கட்டளை வசதியைப் பயன்படுத்தி இயக்கவும் நிறுத்தவும் முடியும் என்பது கூடுதல் வசதியாகும்.மேம்படுத்தப்பட்ட குரோம்: இப்பதிப்பில் இணைய உலாவலில் புதிய அனுபவத்தைத் தரும் வகையில் குரோம் உலாவி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பல இணையதளங்களை ஒரே நேரத்தில் எளிதாக பார்க்க வசதியாகவும், டேப் விண்டோக்களில் தாவிச் செல்ல வசதியாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.யு.எஸ்.பி. டைப் சி: இந்தப் பதிப்புள்ள போனில் யு.எஸ்.பி. டைப் சி வகை போர்ட் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் போல இந்த வகை போர்ட்டும் ஹார்ட்வேரில் முக்கியமான மாற்றமாகும். எளிதாக மற்றொரு ஹார்ட்வேருடன் மொபைலை இணைக்கவும், வேகமான தகவல் பரிமாற்றத்திற்கும், யு.எஸ்.பி. சார்ஜர் பின்னை மாற்றி செருகினாலும் ஏற்றுக் கொள்ளும் விதமாகவும் இந்த போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.சுழலும் ஸ்கிரீன்: இப்பதிப்பில் ஹோம் ஸ்கீரீன் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரேம் மெமரியை நிர்வகிக்க ஆண்ட்ராய்ட் ரேம் என்ற வசதி அளிக்கப்பட்டுள்ளது.இப்பதிப்பு கூகுள் நெக்ஸஸ் போனிலும், மோட்டோ எக்ஸ் போனிலும் மட்டுமே தற்போது வழங்கப்படவிருக்கிறது. மற்ற மொபைல் நிறுவனங்கள் வெளியிட சிறிது காலமாகும்.தற்போதுள்ள பதிப்புகளில் கிட்காட் பதிப்பை 39.2 சதவீதம் பேரும், ஜெல்லிபீன் பதிப்பை 31.8 சதவீதம் பேரும் பயன்படுத்துவதாகவும், லாலிபப் பதிப்பை 12.4 சதவீதம் பேரும் மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில் பிரபலமாக உள்ள மொபைல் இயங்குதளங்களில் 59.1 சதவீதத்தைப் பிடித்து ஆண்ட்ராய்ட் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 44.75 சதவீதமாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: