கடந்த இரண்டு நாட்களாக அனைத்து முக்கிய தேசிய நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பது நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். ஒன்று ஒரு கார்ப்பரேட் சாமியார் நிறுவனத்தின் பிஸ்கட் விளம்பரம். மற்றொன்று கடந்தஆறு மாதங்களுக்கு முன் தடை செய்யப் பட்டு, நீதிமன்றத்துக்கு சென்று தடை யாணையை நீக்கியதாகவும், மீண்டும் உண்பதற்கு பாதுகாப்பானது என்றும் நம்பிக்கையை உருவாக்கும் வண்ணம் பெரியகலர் விளம்பரம். இது வெவ்வேறு நிகழ்வு போக்குளாக பார்க்க இயலாது. இரண்டிற்கும் கட்டாய தொடர்பு உள்ளது. ஒரு பன்னாட்டு நிறுவனம், ஒரு இந்துத்துவ சாமியாரின் வர்த்தக நிறுவனம் அதனின் புது தயாரிப்பு, அதனை சந்தைபடுத்திட ஏற்பாடு என நம்நாடு முச்சந்தியில் நிற்கின்றது. நெஸ்லேவின் உணவு தயாரிப்பான மேகி நூடுல்சுக்கு இருந்த விற்பனை தடையை நீதிமன்றம் விலக்கி விட்ட தாகவும், உடல் நலத்திற்கு தீங்கு விளை விக்கும் எந்த வித நச்சு வேதிப்பொருளும் வரையறைக்கு அதிகமாக இல்லை என்றும், ஆகவே உங்களுக்கு மிகவும் பிடித்த மேகிக்கு பேராதரவு நல்கிட வேண்டுமென அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. மேகியில் மோனோ சோடியம் குளூக் கோமேட் (சிங்கப்பூர், மலேசியா, இலங்கை) அளவுக்கு அதிகமாக இருப்பது ஆய்வில் உணவுத்துறை அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு இடங் களில் இதே போன்ற நடவடிக்கைகள் நடத்தப்பட்டு அனைத்து மாநிலங் களிலும் விற்பனை தடை செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. அதன் பிறகு நடந்ததை அசை போட்டுபார்ப்பது அவசியம். இந்திய தர கட்டுப் பாட்டை குற்றம் சொன்னது நெஸ்லே நிறுவனம். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற தடை இல்லை என அங்கலாய்த்து கொண்டது.

அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தடை விதிக்கப்பட்டது முறையற்ற வேலை என்றும் உலகில் வேறு எங்கும் இது போல் நடக்கவில்லை என்றார். ஏனைய உலக நாடுகளில் குறிப்பாக நம்முடைய அண்டை நாடுகளை (சிங்கப்பூர், மலேசியா, இலங்கை) ஒப்பிட்டு அங்கெல்லாம் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று தன் நிறுவனத்தின் பொருளுக்கு ஆதரவு தேடினார். அதிலும் அவர் எதிர்பார்த்தபடி விசயங்கள் நகரவில்லை. மாறாக தடை தொடர்ந்தது. இப்போது நீதிமன்றம் தடையை நீக்கியபிறகு இதுவரையில் இரண்டு மாநில அரசுகள் தான் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. இதில் குஜராத் அரசு தான் முந்திக்கொண்டு முதலிலும், இரண்டாவதாக கர்நாடக அரசும் செய்துள்ளது. ராஜ விசுவாசிகள் என்பதை மீண்டும் மீண் டும் நிரூபிக்கிறார்கள். விசயம் இதோடு நிற்க போவதில்லை. இனிமேல் விளை யாட்டு ஆரம்பமாகும். சோதனைகள் நடத்தப்பட்ட போது இருந்த வேதிபொருளின் அளவு இப்போது எப்படி குறையும், அல்லதுநீதிமன்றம் அளவுக்கு அதிகமானதையும் அனுமதிக்கின்றதா? புதிராக உள்ளது.எது எப்படியோ ஒரு பன்னாட்டு நிறுவ னம் தன்னால் எதையும் சாதிக்க முடியும், எவ்வித சட்டங்களையும் வளைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. மோடியின் ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக் கும் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம். உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட் களில் கூட கேடு கெட்ட ஒரு அரசியல்……

மேகிக்கு அனுமதி வழங்கப்பட்ட 24மணி நேரத்திற்குள் ஆன்-லைனில்60,000 பாக்கெட்டுகள் விற்று தீர்த் தது எனும் செய்தியை ஊடகங்கள் வெளி யிட்ட போது அதிர்ச்சியானது. அதோடு அனைத்து பலசரக்கு கடைகளில் மீண்டும் வந்து விட்டோம், இனி கவலை இல்லை எனும் விளம்பரங்கள் அமர்கள மாக அலங்கார அட்டைகள் தொங்கவிடபட்டது. அடுத்த நாள் செய்தித்தாளை விரித்த போது இதுவரை 6லட்சம் பாக்கெட்டுகள் விற்பனை ஆனது எனும் செய்திமேலும் கவலையளித்தது. அதே தினசரியில் இந்திய உணவு தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் மேகி விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து, ஒரு நீதிமன்றம் சொன்னால் போதுமா நாங்கள் தானே மீண்டும் சான்றிதழ் அளிக்க வேண்டுமென சொல்லியுள்ள தும் வந்துள்ளது.

நெஸ்லே நிறுவனமோ ஒரு படி மேலே போய் கடந்த ஆறு மாதங்களாக விற்க முடியாமல் போட்ட தடையின் காரணத்தை சொல்லி, நஷ்ட ஈடு கேட் கிறது…. சுவிஸ் நாட்டு வர்த்தக துறை அதிகாரி மேகி தடையினால் சுவீடன் நாட்டு கம்பெனிகள் இந்தியாவில் முத லீடு செய்ய தயங்குகிறது எனும் பிட்டை போட்டவுடன் நமது அமைச்சர் காலில் விழாத குறையாக ஒரே கதறல்……நாட்டை சுரண்ட அனுமதி வழங்குவதில் அவ்வளவு அக்கறை. கொடுமை.

இது உள்நாட்டு விளம்பரம்………

இப்படி மேகி விளம்பரம் முழுப்பக் கத்தை அடைத்து கொண்டு வர மேலும் சிலபக்கங்களை புரட்டினால் பதஞ்சலி பிஸ்கட்விளம்பரம் 0ரூ மைதா , 0ரூ கொழுப்பு, 0ரூ டிரான்ஸ் ஃபேட் ( உடல் பருமனை உரு வாக்கும் கொழுப்பு) என்று சொல்லி மூலை யில் யோக புகழ், ஊழல் எதிர்ப்பு புகழ், உலகெங்கும் பல கோடி சொத்துகளை சேர்த் திருக்கும், இந்துத்துவத்தின் அடிப்பொடி ஆதரவாளர், ராம்தேவின் புகைப்படம். இதுபுறந்தள்ளிவிட்டு போகக்கூடிய விளம் பரம் அல்ல…..ராம் தேவ் எப்படிபட்டவர் எப்படி இவ்வளவு பிரபலமடைந்தார் என்பதெல் லாம் காங்கிரசின் ஊழல் பட்டியல் தொடர்ச்சி யாக வந்த போது இவர் தலைநகர் தில்லி யில் நடத்திய உண்ணாவிரதம் பற்றியும் அதனால் பிஜேபி அடைந்த அரசியல் லாபம் என்னவென்பதும் நாம் இன்னும் மறக்கவில்லை. இவர் ஒரு பெரிய கார்ப்பரேட் சாமியார். யோகா கலையை வர்த்தகமாக்கி, பெரும் பணக்கார கூட்டத்தை சேர்த்து கொண்டு அதன் மூலம் ஏகப்பட்ட சொத்து சேர்த் தவர். உலகமெங்கும் கிளைகளை துவக்கி யோகா சொல்லி தருகிறேன் என்ற பேரில் தீவிர இந்துத்துவ கருத்துக்களை பரப்பி வருபவர். ஆசிரமங்கள் நிறுவி, பல அரசி யல் தலைவர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தனக்கான ஒரு பெரும்சாம்ராஜியத்தை உருவாக்கி கொண்டார். அதன் மூலம் வர்த்தக நிறுவனத்தை உரு வாக்கி அதற்கு பதஞ்சலி என பெயரிட்டு வியாபாரம் செய்கின்றார். உடல் நலத்தைப் பாதுகாக்க யோகா செய்தாலே போதுமானது வேறு எதுவும் தேவையில்லை என்று வாய் கிழிய பிரசங் கம் ஒரு பக்கம், மறு பக்கம் ரொட்டி வியாபாரம். எவ்வளவு நரித்தனம் பாருங்கள். இந்துத்துவ சாமியார்கள் மேலும் பலர் இப்படி கிளம்பக் கூடும். காரணம் மத்தி யில் நடக்கும் அவர்களின் ஆட்சியை அவர்கள்எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள். அது போக இப்படிபட்ட தயாரிப்பில் சாமியார்கள் இறங்கலாமா என்று கேட்டவுடன் பல ஆண்டுகளாக பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை ஏமாற்றிவருவதை சொல்லி அதை கட்டுப்படுத் தவே பதஞ்சலி பிஸ்கட் என்று சொல்லி விட்டு மேலும் ஒரு படி போய் இது சுதேசிதயாரிப்பு. ஆகவே மக்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென சொல்லியுள்ளார் வியாபார காந்தம் பாபா ராம்தேவ். ஒரு விசயம் தெளிவு. எல்லாவற்றையும் காசாக்கும் முயற்சியில் ராம்தேவ் போன்ற சாமியார்கள் இறங்கியுள்ளனர். இன்னும் எதெல்லாம் காவி கூட்டத்திலிருந்து வரும்என தெரியாது. ரொட்டி போதாதென்று அடுத்த மூன்றுநாட்களாக பதஞ்சலி தேன் விளம்பரம் வந்தது. சுத்தம் , விலை குறைவு, தரம் என்றெல்லாம் ஒப்பீடு… இதை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இரண்டு நாட் களுக்கு முன் பதஞ்சலி நூடுல்சும் அறிமுகம் ஆனது. வர்த்தகம் என்று வந்து விட்டால் எல்லாமே காசு தானே….இதிலும்ஒரு சிக்கல் வந்தது. இந்திய தரக்கட்டுப் பாடு மற்றும் சுகாதார நிறுவனம் பதஞ்சலி நூடுல்சுக்கு அனுமதியே வழங்கப் படவில்லை, எப்படி அவர்கள் சந்தைப்படுத்தலாம் எனும் கேள்வி எழுப்ப, இல்லை நாங்கள் அனைத்து சான்றிதழ்களும் வாங்கிய பிறகே சந்தைக்கு வந்துள்ளோம் என ராம்தேவ் அறிக்கை என நூடுல்சால் இந்திய மக்களுக்கு ஏக குழப்பம்.

எல்லாமே சுரண்டல்….

நெஸ்லே நிறுவனம் தனக்கு இருக் கும் அரசியல் மற்றும் பொருளாதார செல் வாக்கை பயன்படுத்தி மீண்டும் மேகியை சந்தைப்படுத்திவிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மேகி போன்ற உணவு வகைகளால் என்ன தீங்கு ஏற்படும்என்பதை பல பத்திரிகைகள் பக்கம் பக்கமாக கட்டுரைகள் தீட்டின. இப்போது தடைநீக்கிய போது யாரும் எதிர்ப்பு கூட தெரி விக்கவில்லை. ஒரு வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? விஞ் ஞானப்பூர்வமான அதன் முடிவுகள் என்ன என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்திட வேண்டாமா எனும் நியாயமான குரல் எந்த திசையிலிருந்தும் வரவில்லை. உலகமயம் ஏற்படுத்திய வணிகமய மான உலகில் நாம் சிக்குண்டு தவிக் கிறோம். வேலை பளு, மன அழுத்தம், உடல் நிலை பாதிப்பு, கொடுமையான பொருளாதார சுரண்டல் , என நம்மை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எங்களிடத் தில் இருக்கு என போலியாக மாய்மாலம் பேசி யோகா செய்; மனம் அமைதி பெறும்,தியானம் செய், நான் சொல்லும் உபதேசங் களை கேள் மனம் பறவையாக சிறகடிக்கும் என சொல்லி பல வழிகளில் அப்பாவிமக்களை சுரண்டும் சிலர் இன்று தொழிலதி பர்களாக, கல்வி தந்தைகளாக இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம். அதில் ராம்தேவ் ஒரு வகை.

என்.சிவகுரு

Leave A Reply