திருச்சி:-

மக்கள் நலக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நவ.25 புதனன்று திருச்சியில் நடைபெறுகிறது. மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தை டிசம்பர் 12 ஆம் தேதி அன்று மதுரையில் பெரும் சிறப்புடன் வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், அடுத்த கட்டசெயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும் கூட்டணியின் அங்கங்களான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று (புதன்) திருச்சி மாநகரில் பெமினா ஹோட்டல் கூட்ட அரங்கத்தில் காலை 10 மணி தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: