சிங்கப்பூர், நவ.24-

இந்தியாவும் சிங்கப்பூரும் தங்களுக்கு இடையிலான உறவை ராஜீய ரீதியிலான நிலைக்கு உயர்த்திக் கொள்வது, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. பிரதமர் மோடியின் பயணத்தையொட்டி ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின்னர் இரு நாடுகள் சார்பிலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவும், சிங்கப்பூரும் இருதரப்பு உறவை ராஜீய ரீதியிலான நிலைக்கு உயர்த்திக் கொள்வது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசியல், பாதுகாப்பு மற்றும்பொருளாதார, கலாச்சாரம், மக்கள் தொடர்பு ஆகியவற்றுக்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஏற்கெனவே உள்ள உறவைமேலும் பலப்படுத்திக் கொள்ள இது வழிவகுக்கும். மேலும் பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியில் பங்களிப்பை வழங்குவதற்கான கட்டமைப்பாகவும் இது அமையும். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இருநாட்டு பாதுகாப்பு அமைச்சகங்கள் நிலையிலான பேச்சுவார்த்தை, இருதரப்பு ராணுவ கூட்டுப்பயிற்சி, ராணுவ தளவாட உற்பத்தித் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த வகை செய்யும். கணினி தகவல் பாதுகாப்பை (சைபர் செக்யூரிட்டி) மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதுகணினியில் ஊடுருவி தகவல்களை முடக்குவது போன்றசமூக விரோதிகளின் செயலை தடுப்பதற்கான நவீன தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ள உதவும். இதுபோல, விமானப்போக்குவரத்து, நகர்ப்புற திட்டமிடல், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, கலாச்சாரங்களை பகிர்ந்துகொள்வது, கடல் பாதுகாப்பு உட்பட மொத்தம் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Leave a Reply

You must be logged in to post a comment.