லண்டன், நவ. 23-

லண்டனில் நடைபெற்ற ஏடிபி உலக டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி நான்காவது முறையாக பட்டத்தை வென்றார் ஜோகோவிச். ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி உலகடென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு  சாம்பியனும் உலகின் முதல் நிலை வீரருமான ஜோகோவிச்சை ரோஜர் பெடரர் எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று நான்காவது முறையாக பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.போபண்ணா இணை தோல்விஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா விளையாடினார்.

கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர்கள் யாரும் இதுவரை பட்டம் வென்றதில்லை. ரோகன் போபண்ணா அந்த ஏக்கத்தை தணிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து)- ஹோரியா டெகாவ் (ருமேனியா) ஜோடி ரோகன் போபண்ணா (இந்தியா) புளோரின் மெர்கா (ருமேனியா) இணையை எளிதில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.