தில்லி, நவ.23-

தில்லியில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்கு பள்ளி குழந்தைகளுக்கு 10 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது.இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட்டிசம்பர் 3–ந்தேதி தில்லிபெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை ஓய்வு பெற்றநீதிபதியும், கண்காணிப்பாளருமான முகுல் முத்கல் நிர்ணயித்துள்ளார்.இதன்படி பள்ளி குழந்தைகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு தினத்துக்கு ரூ.10 கட்டணம் வீதம் 5 நாட்களுக்கு ரூ.50 சீசன் கட்டணமாகும்.சாதாரண ரசிகர்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.100 ஆகும். இதன் சீசன் டிக்கெட் ரூ.500 ஆகும். கார்ப்பரேட் பாக்சுகளுக்கான டிக்கெட் விலை ரூ.1000 ஆகும்.தில்லி கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே மோசடியில் சிக்கி இருப்பதால் இலவச டிக்கெட் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: