மலேசியா,நவ23-

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்தியது.இதில் இந்திய வீரர்கள் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக விளையாடினர். இந்த ஆட்டத்திற்கு பாகிஸ்தான் வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் இந்தியா 6-2 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்திய வீரர் ஹர்மன்பிரீத் அபாரமாக விளையாடி நான்கு கோல்கள் அடித்தார். அர்மான் குரேஷ், மன்பிரீத் சிங் தலா ஒரு கோல் அடித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.