‘மீண்டும் மீண்டும் முழங்குவோம்!’பல அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மும்பை, கோவை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் தங்களுடைய இளமைக்காலத்தை கழித்து வருகின்றனர். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பது நியாயமல்ல. நாகூர் தர்காவிற்கு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபடசெல்வது வழக்கம். அதேபோல வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் உள்ள அன்பளிப்பு பொருட்கள் இதர மதத்தை சேர்ந்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக வழங்கியதாகும். குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையென்றால், மத வித்தியாசம் பார்க்காமல், பள்ளிவாசலுக்கே பல பெண்கள் செல்வார்கள். அவர்களுக்கு அங்கே உள்ளவர்கள் உதவி புரிகின்றனர். இத்தகைய இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கள் தற்போது முன்னுக்கு வந்துள்ளன. எனவே, மக்கள் ஒற்றுமை என்பதை மீண்டும் பேச வேண்டும்.முன்பு மதக் கலவரமே நடக்காத தாத்ரி கிராமத்தில், மாட்டுக் கறி வைத்திருந்ததாக முஸ்லிம் பெரியவர் முகம்மது இக்லாக் கொடூரமாக கொல்லப்படுகிறார்; இமாச்சலப்பிரதேசத்தில் மாடுகளை வாங்கிவந்தவர் அடித்தே கொல்லப்படுகிறார். இந்த கொலை பாதகர்கள், மாடுகளை தங்களது தாய் என்று பசப்பு வார்த்தைகள் பேசித் திரிகிறார்கள்.ஆனால் உண்ம

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் 87 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் முஸ்லிம்கள் 7 ஆயிரம் பேர். கிறிஸ்தவர்கள் 2 ஆயிரம் பேர். நெசவுத் தொழிலை நம்பியே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.அருப்புக்கோட்டை, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள நகராகும். இங்குள்ளஆழாக்கரிசி விநாயகர் கோவில், சிவன் கோவில் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முஸ்லிம்தலைவர்கள் பங்கேற்பதும், இந்து கோவில்களுக்கு முஸ்லிம்கள், பீரோ, குத்து விளக்குகள் ஆகியவற்றை நினைவுப் பரிசாக வழங்கி வருவதும் பல காலமாக நடந்து வருகிறது. முஸ்லிம்கள் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்துக்கள் பங்கேற்பதும் காலம், காலமாய் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த நல்லுறவுக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் பாஜக, இந்துமுன்னணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.முதன் முதலில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது, குறிப்பாக 2000-ஆம் ஆண்டுஇவர்கள் திட்டமிட்டு பிரச்சனை கிளப்பினர். தொழுகை நேரத்தில் “கொட்டு மேளம்“ அடிப்பதை ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்தது. பின்பு, பிரச்சனையை உருவாக்க விநாயகர் சிலை ஊர்வலத்தை ஆயுதமாக பயன்படுத்தியது. தொழுகைக்கு இடையூறுதிட்டமிட்டே தொழுகை நேரம் பார்த்து இல.கணேசன் தலைமையில் பள்ளிவாசல் வழியாக மேளம் அடித்து விநாயகர் சிலையை கொண்டு செல்ல முயன்றனர். அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறை, வருவாய்த்துறை தலையிட்டு வழக்கமாக செல்லும் பாதையில் ஊர்வலத்தை திருப்பி விட்டது.

இதைத் தொடர்ந்து விஎச்பி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி, சிலை கொண்டு செல்லும் பாதை,நேரம், பாதுகாப்பு ஆகியவற்றை அருப்புக் கோட்டை காவல் கண்காணிப்பாளர் தீர்மானிக்க வேண்டும் என உத்தரவிட்டார். விதிமீறும் வி.எச்.பிஇதையடுத்து, சிலை ஊர்வலத்திற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும், சமாதானக் கூட்டம் நடத்தப்படும். அதில் போடும் ஒப்பந்தங்களை தொடர்ந்து வி.எச்.பி மீறி வருகிறது. கடந்த 21.9.2015 அன்று மாலை 6 மணிக்குள் ஊர்வலத்தை முடிக்க வேண்டுமென்பதை மீறி, தாமதமாகப் புறப்பட்டுள்ளனர். பள்ளிவாசல் அருகே மேளம் அடிக்கக் கூடாது என்பதை மீறி மேளம்அடித்ததோடு, மசூதியின் பின்புறம் தேவையற்ற முழக்கங்களை எழுப்பியுள்ளனர். தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தடியடிஆனால் காவல்துறை, முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியது. தடியடியைக் கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. முஸ்லிம்கள் 10 பேரை கைது செய்ததோடு, 350 பேர் மீதுகொலை முயற்சி உள்ளிட்ட வழக்கை காவல்துறை பதிவு செய்துள்ளது. ஊர்வலம் செல்ல முயன்ற 250 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.உண்மை அறியும் குழுஇதையடுத்து, நடைபெற்ற சம்பவங்களை அறிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. அதில் அதிர்ச்சிகரமான விபரங்கள் தெரியவந்தன.

மசூதி அருகே முழக்கமிட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்தவில்லை. மாறாக,தடியடித் தாக்குதலை முஸ்லிம்கள் மீது தேவையில்லாமல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒப்பந்தத்தை மீறும் இந்து முன்னணியினர் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. முஸ்லிம்கள் மீது போடப்பட்டுள்ள கொலை முயற்சி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் காக்க அரசு பிரச்சாரம் செய்ய வேண்டும். விதி மீறல்களில் ஈடுபடும் வி.எச்.பி. மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என அக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் ஒற்றுமைக் கருத்தரங்கம் இந்த நிலையில், அருப்புக்கோட்டையில் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் தலைமை வகித்தார். பி.எஸ்.போஸ்பாண்டியன் அறிமுக உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் ஆனந்தன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் கலைவேந்தன், மதிமுக நகர் செயலாளர் மணிவண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் காத்தமுத்து ஆகியோர் மதவெறி, சாதி வெறிக்கு எதிராக கருத்துரையாற்றினர்.

நூல் வெளியீடு“மௌனத்தின் சாட்சியங்கள்“ என்ற நூல்வெளியிடப்பட்டது. நூலை அறிமுகம் செய்து மு.அ.காஜாமைதீன் பேசினார். ஆசிரியர் சம்சுதீன்ஹீரா ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து 21 பேர் கொண்ட மக்கள் ஒற்றுமை பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மதவெறியின் அபாயங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.ஐ.மாடசாமியின் சமூக சீர்திருத்தப் பாடல் கள், மதிக்கண்ணன் குழுவினரின் நாடகம் ஆகியவை நடைபெற்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.