இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற ஒருசூழல் மூச்சுத்திணற வைக்கிறது என்பதை விளக்கும் வகையில் ஏராளமானவை எழுதப்பட்டுள்ளன. இயான்பெக் ஈவன், சல்மான் ருஷ்டி போன்ற 200 எழுத்தாளர்கள் நரேந்திரமோடியிடம் இந்தப் பிரச்சனையை எழுப்புமாறு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எழுதிய ஒரு திறந்த மடல் மூலம் பிரதமர் நரேந்திரமோடியை இந்த ‘சகிப்புத்தன்மையின்மை’என்ற நச்சரிப்பு தொடர்ந்து வந் தது. முடிவுபெறாத ஒருதொடர் நிகழ்வான இந்தச்‘சகிப்புத்தன்மையின்மை’ சுருக்கமாக மோடியின் வார்த்தைகளில் சொன்னால் ‘துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள்’ எம்.எம்.கல்புர்கியின், மொஹமது இக்லக்கின், டயோட்டா’ ஷோரூம்’ பணியாளர்களின், யாகூப் ஷேக்கின், தொடர்ந்து நிகழ்ந்த காஷ்மீர் லாரி டிரைவர்களின், சன்பேத்தில் எரிக்கப்பட்ட இரண்டு தலித் குழந்தைகளின் கொலைகள் எல்லாமே ‘சகிப்புத்தன்மையற்ற’ நிகழ்வு பற்றிய ஒருவகையான சிறிய கணக்கெடுப்புத்தான் இது. உங்களோடு ஒத்துப்போகாதவர்களை இங்கே கொல்வதற்காக இன்று பல்வேறு உத்திகள் வகுக்கப்பட்டு ‘சகிப்புத் தன்மையின்மை’ ஒரு புதியமுறையில் அவற்றைச் சாத்தியமாக்குகிறது. இங்கு நம்முன்  எடுத்துக்காட்டாக  ஒட்டு மொத்த சங்பரிவாரங்களின் படையும், வன்முறையில் ஈடுபடும் ஆரவாரக் கூட்டமும் , இவர்களில் பலர் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் – வெறுப்புப் பேச்சை நிகழ்த்தி வறுத்தெடுக்கும் நடை முறையைக் கையாளுகின்றனர் எனத் தோன்றுகிறது.

இன்னொரு உத்தியாக, அரசு நிதியளிக்கும் கலாச்சார நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சிமுறையாக இந்துத்வாவின் ஒற்றைக்கலாச்சாரத்தை ஏற்றுக் கொண் டவர்களைப் பதவிகளில் நியமிப்பது, அதன்பிறகு பெரும்பான்மையினரின் ‘சகிப்புத்தன்மையின்மையை’ அரசு சகித்துக்கொள்ளும்; தண்டிக்கப்பட மாட்டார் கள் என்ற செய்தி அனுப்புவது என்பதை மேற்கொண்டுள்ளது.. அதன் விளைவாக அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வுகள் – புத்தக வெளியீடுகளைத் தடுத்தல் ‘கர் வாப்ஸி’, ‘லவ் ஜிகாத்’ போல மேலும்மேலும் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

அதிகப்படியான சகிப்புத்தன்மையின் வகைகள்

இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக ‘சகிப்புத்தன்மையின்மையின் வகைகளாக அல்ல, ’மிக அதிகபட்சமான சகிப்புத்தன்மையின் வகைகளாக- வெறுப்பூட்டும் பேச்சுக்கள், குறுங்குழு வன்முறைகள், அரசியல் சாசனத்தில் உறுதியளிக்கப்பட்ட சுதந்திரத்தைச் சீர்குலைப்பது ஆகியவை வெளிப்பட்டன. இவ்வாறு சகித்துக் கொள்ள முடியாதவற்றை அரசு சகித்துக்கொள்வது எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், விஞ்ஞானிகளை எந்தெந்த வகையில் முடியுமோ விருதுகளைத் திருப்பி அனுப்புவது, திறந்த மடல் எழுதுவது போன்ற- அந்தந்த வகைகளில் எதிர்க்கத்தூண்டியது.

துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இந்தப்பிரச்சனைகள் வாழ்வா? சாவா? என்ற பிரச்சனையாக உண்மையில் இருப்பதிலிருந்து, ‘சகிப்புத்தன்மையின்மைகளில்’ ஒன்றாக வர்ணிப்பதும், ஒரு கலாச் சாரப்போர் போலத் தோன்றவைப்பதும் அரசுக்கு எளிதானதாகிறது. ஆகவே, முதலில் தேசிய ஜனநாய கக் கூட்டணி அரசு இந்த எதிர்ப்பு அலைகளைத் ‘தயாரிக்கப்பட்ட கிளர்ச்சி’ என ஒதுக்கித்தள்ளியது. பின்னர் அந்தக்கிளர்ச்சியாளர்களை ‘காங்கிரஸ் சார்பாளர்கள்’ என அவப்பெயர் சூட்ட முயன்றது. ஆனால் மூடியின் ஆய்வறிக்கையையோ அல்லது அமெரிக்காவின் பத்திரிகைகளையோ, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரையோ காங்கிரஸ் என்று நிராகரிக்க முடியாது. அருண்ஷோரி தே.ஜ.கூ. அரசை ‘காங்கிரஸ் + பசு’ என்று அடையாளப்படுத்துகிறார். அரசின் பிளவுபடுத்தும் ’சகிப்புத் தன்மைக்கான’ ஆதாரங்கள் குவிந்த போது, இவை எல்லாவற்றிலும் பாதிக்கப்பட்டவராகக் காட்ட மோடியை பா.ஜ.க தனது உறுதியான கடைசிப் புகலிட மாக்கிக் கொண்டது.

அண்மையில் ஊடகங்களில் பெரிதும் எடுத்தாளப்பட்ட ஒருமுகநூல் பதிவில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஒரு கூர்மையான எதிர்த்தாக்குதலை, ‘2002 முதல் பிரதமர் தான் ’தத்துவார்த்த சகிப்புத்தன்மையின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டவர்’ என்ற கருத்தைத் தெரிவித்தார். அது உண்மையின் மீதான ‘சகிப்புத் தன்மையின்மை’ என்ற சிந்தனையாகவும், வழக்கத்துக்கு மாறான ‘சகிப்புத் தன்மையின்மை’ என்ற கருத்தாக்கத்தின் மீதான ‘சுழல்’ ஆகவும் இருந்தது. இந்தத்தந்திரம் அவரது எதிராளிகளை வாயடைக்க வைத்தது.

சகிப்புத்தன்மையின் பொருள் என்ன?

உண்மைத்தன்மையற்ற, தந்திரமான இந்தக்கருத்து, சிலவற்றை ஆய்ந்து பார்க்கவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக, ‘சகிப்புத்தன்மையின்மை’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை‘விமர்சனம்’ என்பதாகத் திரிக்கிறார். ஆனால் அதன் அர்த்தம் அதைவிடப் பெரியது. அது இன்னொருவரின் அரசியல்,சமூக சமத்துவம், தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றைத் தடுப்பதாகும்.

வேறு வகையில் சொல்வதானால், அரசு அல்லது அரசு இயந்திரத்தின் ஆதரவையார் அனுபவிக்கிறார்களோ, அவர்கள் கைகளில் உள்ள அதிகாரம், அரசால் ஆளப்படும் சமூகத்தின் மீது சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்படுத்தப்படும். ‘தத்துவார்த்த சகிப்பின்மை’ என்ற அருண் ஜெட்லியின் மனதில் உள்ள கருத்து இந்த விஷயத்தில் அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை. அல்லது ஒரு ஆண்டானின் தத்துவத்துக்கு ஓர் அடிமையின் ‘சகிப்புத்தன்மையின்மை’ என்று பொருள்படுகிறது. தற்போதைய நிகழ்வில், உண்மையான பிரச்சனை ‘சமூகத்தின் சகிப்புத்தன்மை இன்மை’ அல்ல, இந்தச் சமூகம் 18 மாதங்களில் ஒட்டுமொத்தமாக ஒன்றும் மாறிவிடவில்லை.-ஆனால், அரசின் சகிப்புத்தன்மை தான் மாறியிருக்கிறது. அது தத்துவத்தைப் பற்றியதல்ல. ஆனால், சாதாரண விஷயமாக அறியப்படும் ‘சட்டம்-ஒழுங்கு’ பற்றியது. அதைப் பராமரிக்க வேண்டியது அரசே. ஒரு செயல்படும் அரசில், அரசுசாராத செயல்பாட்டாளர்கள் சட்டத்துக்குப்புறம்பான வன்முறைகளில் ஈடுபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது. இவற்றைச் செய்வதை தந்திரமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் எப்போது அரசு சகித்துக்கொள்கிறதோ அல்லது உற்சாகப்படுத்துகிறதோ அப்போது இவர்களால் உயிர்க்கொலை முதலான சகிக்க முடியாத செயல்பாடுகளைச் செய்ய முடியும்.

இரண்டாவதாக, அருண் ஜெட்லியின் கருத்தில் உள்ளடங்கியிருப்பது -’பிரதமர் பாதிக்கப் பட்டிருக்கிறார்’ என்று சொல்வது, ‘பாதிக்கப்பட்டவராகத் தோன்று வதற்குரிய செயல்களைச் செய்திருக்கிறார்’ என்று தோன்றவைக்கிறது. ‘இந்தநாட்டிலேயே மிகவும் அதிகாரம் வாய்ந்த ஒருபதவியை அவ்வாறு பாதிக்கப்பட்டவர்தான் அடையமுடியும்’ என்றானால், ஏராளமானவர்கள் அதேபோல் பாதிப்புக்குள்ளாகவே விரும்புவார்கள். மூன்றாவதாக, அருண் ஜெட்லியின் கூற்றை நாம் மெய்யாகவே ஒத்துக்கொண்டால், ‘மோடி எதிர் கொண்ட’ தத்துவார்த்த சகிப்புத்தன்மையின்மையின் உண்மையான தன்மை என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் கூற நாம்அவரது தத்துவம் என்ன என்பதைக் கூறியாக வேண்டும். மோடியின் உண்மையான தத்துவம் என்பது எப்போதுமே வளர்ச்சி என்பதாகத்தான் இருந்திருக்கிறது வளர்ச்சியைத் தவிர  வேறொன்றும் இல்லை. இது உலகறிந்த உண்மை. எழுத்தாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் மோடிக்கு ’விசா’ தர மறுத்த அமெரிக்கா ஆகிய எல்லாருமே மோடியின் வளர்ச்சி சார்ந்த தத்துவத்தை மறுத்தவர்கள் என்று அருண் ஜெட்லி கருதுகிறாரா? நல்லது. ஆம். இல்லை. ஒருவேளை இருக்கலாம்! இதுதான் அவர் 2002 ஐக் குறிப்பிடுவதற்கான மிகப்பெரிய வீச்சாக இருக்கிறதா? ஒருநிலையில் அது ஒருவெறும் எண். மோடி பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆண்டின் துவக்கம். ஆனால், அடுத்த நிலையில், 2002இல் அவர் என்ன செய்தார்? அல்லது என்ன செய்யவில்லை? என்பதைப்பற்றி மோடியின் புகழ் பாடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நாயின் குரைப்பு! இந்த தேசம்2002இல் இருந்து – அது டீஸ்டா செதல் வாட்டோ அல்லது ரொமிலா தாப்பரோ – அதிலிருந்து மேலே செல்லவேண்டும் என்று விரும்புகிறது.

ஆனால், மோடியின் அமைச்சரவையில் உள்ள, தாராள சிந்தனை கொண்டவர் எனக் கருதப்படும் ஓர் அமைச்சர், 2015இல் நமக்கு 2002ஐ நினைவுபடுத்துகிறார்! சகிப்புத்தன்மையின்மையால் பாதிக்கப்பட்டவர் மோடி என அப்பாவிபோல அருண் ஜெட்லி கூறுவது, ’எதிர்காலத்தில் இவ்வாறு நடக்கவேண்டும்’ என்ற சுயவிருப்பத்தை நிறைவேற்றுவதில்தான் முடியும் -அந்தஅர்த்தத்தில் அவர் சொல்லவில்லை என்றாலும்! இது மோடியின் தத்துவத்துக்கு எதிராளிகளின் சகிப்புத் தன்மையின்மையால் அல்ல: அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும், சங்பரிவாரத்தில் இணைந்துள்ளவர்களும் அவரது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கப்போகிறார்கள். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.பெற்ற பலத்தஅடி இதற்கு ஒரு தவறில்லாத எச்சரிக்கை ஆகும். சங்பரிவாரங்களின் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்துத் தனித்தன்மை கொண்ட ஒவ்வொருவரும் பிரதமரின் அலுவலகத்தைக் குற்றம் சாட்டாவிட்டால் தனிமைப் படுத்தப்பட்டு மறைந்துபோக வேண்டியவர்களே.

எதிர்ப்பாளர்களை எதிர்ப்பது

மோடி பாதிக்கப்பட்டவர் என்ற அடையாளத்துக்கும்அப்பால், எதிர்ப்பாளர்கள் மீது எதிர்த்தாக்குதல் தொடுக்க இன்னொரு உத்தியாக, அவர்களை சமுதாயத்தின் மேல்தட்டினராக வகைப்படுத்தி, அவர்கள் தில்லியில் உயர்பீடங்களிலிருந்தும், செல்வாக்கு களிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதால் ஊளையிடும் நரிகள் என வண்ணம் பூசுகிறார்கள்.

இது உண்மையல்ல, உண்மையாகவே ஏற்றுக்கொண்டாலும், தே.ஜ.கூ. ஆட்சியில் தைரியமும், பதவியும் பெற்றவர்களின் சுதந்திரச் சிந்தனைப்படை, மெய்யாகவும், மிகவிரைவாகவும் இதே கதிக்கு உள்ளாக்கப்படுவார்கள். இவற்றினாலெல்லாம் உண்மையில் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பிரத மரின் ஊடக நிர்வாகிகளும், பத்திரிகைகளிலுள்ள அவர்களது ஒலிபெருக்கிகளும்தான். அவர்கள் நேரடியாகச் சிலகேள்விகளுக்குப் பதில் கூறச் சிரமப்படுகிறார்கள்.

“நமது பிரதமர் உறுதியான தலைவரா? அல்லது பலவீனமான தலைவரா? அவர் சுயகட்டுப்பாட்டில்தான் இருக்கிறாரா? அல்லது கட்டுப்பாட்டில் இல்லையா? அவர் வளர்ச்சிக்காக இருக்கிறாரா? அல்லது வளர்ச்சியில் நீடிக்க மாட்டாரா?” மோடி உறுதியான தலைவராக, கட்டுப்பாடு மிக்கவராக, வளர்ச்சிக்காக இருப்பவர் என்றால் அவர் தனது வளர்ச்சித்திட்டங்களைத் தங்களது பிளவுவாதத் திட்டங்களால் சீர்குலைக்கும் சங்பரிவாரங்களுக்கு எதிராக ஒரு வெளிப்படையான பொதுநிலையை எடுக்க முடியும்.

ஆனால், இது நாள் வரைக்கும் இருந்தது போன்றவர் என்றால், அவர்களுக்கு எதிராக வாய்திறக்க மாட்டார். அப்படியானால் அவர் ஒரு பலவீனமான தலைவர். அவர் தனது கட்டுப்பாட்டில் உள்ளவரோ அல்லது வளர்ச்சிக்கானவரோ அல்ல. அப்படியானால், அவர் எந்த வகையானவர்? அரிஸ்டாட்டில் நீண்ட காலத்துக்கு முன் சுட்டிக்காட்டியது போல ஒரே நேரத்தில் ஒருவர் “ஏ” ஆகவும், அதே நேரத்தில் “ஏ அல்லாதவராக”வும் இருக்க முடியாது. பிரதமரின் “சுழல்” மருத்துவர்களுக்கு மிகக் கடுமையான காலம் முன்னே நிற்கிறது.

Leave A Reply

%d bloggers like this: