சிதம்பரம்,நவ.22-

சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளப்பாதிப்பால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் அதற்கான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் சிதம்பரத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில் புயல் வெள்ளம் அடித்து 12 நாட்கள் ஆகியும் அரசு நிவாரண பணிகளில் முழு அக்கறை செலுத்தவில்லை.மின் பணியாளர்கள் மட்டும் கடுமையாக செயல்பட்டு மின் இணைப்பு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள வர்களுக்கு அரசு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழு மையாக கொடுக்கவில்லை.மாவட்டத்தில் உள்ள சிப்காட்,ஐஎல்எப்எஸ்,என்எல்சி. போன்ற நிறுவனங்களை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தவறிவிட்டது.100 குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் அரசு 8 வீட்டுக்கு மட்டும் நிவாரணம் கொடுக்கிறது.நிவாரணம் கேட்டு ஜனநாயக ரீதியாக போராடும் மக்களை தடியடி நடத்தி கலைப்பது வெட்ககேடு, மக்கள் நலக் கூட்டனி இதனை வண்மையாக கண்டிக்கிறது.40 ஆண்டுகால வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு நிவாரணம் கேட்டு போராடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலீசார் சிதம்பரம் நகரத்தில் அணிவகுப்பு நடத்தியுள்ளனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

எனவே வெள்ளம் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று 23 ந் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு மக்கள்  நல கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்.மறுநாள் 24 ஆம் தேதி திட்டக்குடி, பண்ருட்டி,குறிஞ்சிபாடி,புவனகிரி,கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு தனியார் நிறுவனங்களை அணுகி ரூ. 40 லட்சத்தில் நிவாரணப்பொருட்களை பெற்று வழங்கியுள்ளது.மேலும் இதனை ரூ 1 கோடியாக்க தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து ராம்கோ சிமெண்ட் நிறுவனம் பள்ளிபடை என்ற இடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி மூட்டை கொடுக்க ஏற்பாடு செய்து இருந்தது,இதில் எம்எல்ஏ கலந்து கொண்டு அரிசியை மக்களுக்கு வழங்கினார்.ராம்கோ நிறுவனத்தின் உதவி துணைமேலாளர் ராம்ராஜ்.மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச்செயற்குழு கற்பனைச்செல்வம், சிதம்பரம் நகரசெயலாளர் ராமச்சந்திரன்,ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன்,பள்ளிபடை செயலாளர் ஜோசப்.விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர்மன்ற உறுப்பினர் தியாகு, குறிஞ்சிவளவன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: