மேட்டூர், நவ. 22 –

கர்நாடகாவிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் மேட்டூர் அணை மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக – கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதிகளில் தண்ணீர் அவ்வப்போது நிறம் மாறுவதுடன் துர்நாற்றமும் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 16 கண் மதகு பாலம் வழியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதாகவும், கர்நாடகாவிலிருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீர் காவிரியில் கலப்பதே இதற்கு காரணம் என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து நாள் ஒன்றுக்கு 60 கோடி லிட்டர் கழிவுநீர் காவிரியில் கலப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. மேலும் நீரில் பிராணவாயுவின் அளவு குறைந்ததால் அண்மையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததாக தெரிகிறது.

Leave A Reply

%d bloggers like this: