யாங்கோன், நவ. 22 –

மியான்மரில் ஜேட் எனப்படும் பச்சைக்கல் சுரங்கம் இருக்கும் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 90ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் வட பகுதி மாகாணமான கச்சினில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமானோரை இன்னும் காணவில்லை. மீட்பு நடவடிக்கை களும், சடலங்களைத் தேடும் பணியும் தொடருவ தாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

அந்தச் சுரங்கத்தி லிருந்து வெளியாகும் குப்பைகள் மற்றும் கழிவுகளை, சுரங்க நிறுவனங்கள் கைவிட்ட நிலையில் அவை பெரிய குப்பை மலை போலச் சேர்ந்திருந்தன.இந்த விபத்தில் பலியானவர்கள் பெரும் பாலும் அந்தக் குப்பை மலைக்கு அருகில் இருந்துள்ள வர்கள், அல்லது அந்தக் கழிவுகளில் எஞ்சியிருக்கும் பச்சைக் கற்களை எடுத்துவிற்கும் பணியில் ஈடுபட் டிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.பலர் உறங்கிக் கொண்டிருக்கும்போதே அதி காலை நேரத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.