மியான்மரில் ஜனநாயகம் மலருமா?

கடந்த 6ம் தேதி மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் ஆங் – சான்சூ கி கட்சியான என்எல்டி (தேசிய ஜனநாயக லீக் கட்சி) அமோகவெற்றி பெற்றது. மியான்மர் ராணுவ ஆதரவு ஆளுங்கட்சியான யுஎஸ்டிபிபடுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள கீழ் சபையின் பிரதிநிதிகள் சபை 440 இடங்களில் 323 இடங்களையும், மேல் சபையில் 224 இடங்களில் 168 இடங்களையும் சூகி கட்சி கைப்பற்றியுள்ளது. எனினும், அங்கு ஜனநாயகம் மலருமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

ஆங் சான்1885ம் ஆண்டு மூன்றாவது ஆங்கிலேய பர்மிய போரில் ஆங்கிலேய படைகள் பர்மாவை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டனர். அது முதல் பர்மா ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தது. பர்மிய மன்னரும் அவருடைய குடும்பமும் சிறைபிடிக்கப்பட்டு இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறை காவலில் வைக்கப்பட்டனர்.1915 பிப்ரவரி 13ம்தேதி பர்மா ‘நட்மத்’ என்ற ஊரில் ஊ..பா. என்கிற வழக்கறிஞரின் மகனாக பிறந்தவர் ஆங்சான். ஆங்சான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் இருந்ததால் ஜனநாயக போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். 1939ம் ஆண்டில் ஆங் சான் ஓர் ஆய்வு குழுவை உருவாக்கி அதன் செயலாளராகவும் இருந்தார். அது மார்க்சிய ஆய்வுக் குழு என்றும் அது பர்மிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய முழு விபரம்கிடைக்கவில்லை.ஆங் சான் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ‘பர்மா சுதந்திர ராணுவம்‘ ஒன்றை உருவாக்கி ஜப்பானிய ராணுவத்தினரிடம் ராணுவ பயிற்சி பெற்றார். ஜப்பான் ராணுவம் பர்மாவை ஆக்கிரமித்தபோது ஜப்பானிய ராணுவத்தை எதிர்த்து போரிட்டார்.

ஒரு சமயம் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவருக்கு சிகிச்சை அளித்த தா கின் கி என்கிற நர்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சூகி இவர்கள் இரு மகன்கள், ஒரு மகளை பெற்றனர். அந்த மகள்தான் ஆங்சான் சூகி. அவர் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி பிறந்தார். தன் படையுடன் தலைமையேற்று ஜப்பானிய படைகளை எதிர்த்து ஆங்சான் போரிட்டுவந்தார். பின்பு ‘பாசிச எதிர்ப்பு மக்கள் சுதந்திரக் கழகம்‘ என்ற அமைப்பை உருவாக்கினார். 1947ம் ஆண்டு ஆங்சான் லண்டன் சென்று இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்விளைவாக ஆங்சான் அட்லி உடன்பாடு ஏற்பட்டது. 1947 ஏப்ரலில் நடைபெற்றத் தேர்தலில்ஆங்சான் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆங்கிலேய அரசிடமிருந்து அதிகார மாற்றம் செய்ய ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1947 ஜூலை 19ம் தேதி ஆங்சான் தலைமையில் அரசாங்கத்தின் நிர்வாககவுன்சில் நடைபெற்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இயந்திர துப்பாக்கியுடன் புகுந்து ஈவிரக்கமின்றி ஆங்சானையும் இதர ஆறு நிர்வாக குழுவினரையும் சுட்டுக் கொன்றது. 1945ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி சுதந்திர பர்மா நாடு உருவானது.

ஆங்சானின் நண்பரும், ஆங்சான் கட்சியின் மூத்த தலைவருமான ஊ நூ சுதந்திர பர்மாவின் முதல் பிரதமராக பதவியேற்றார். ஆங்சான் உயிரோடு இருந்திருந்தால் அவர்தான் முதல் பிரதமராக வந்திருப்பார். ஆங்சான் இருக்கும் வரை பர்மா விடுதலையடைய தொடர்ந்து ஜப்பானையும் இங்கிலாந்தையும் எதிர்த்து மக்கள் ஆதரவுடன் போராடினார்.1961 ஆம் ஆண்டு ஊ நூ அரசு ஆங்சான் மனைவி தா கின் கியை இந்தியாவுக்கான பர்மிய தூதராக நியமித்தது. தன் மகளுடன் இந்தியா வந்த தா கின் கி தன் மகளை தில்லியில் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் படிக்க வைத்தார். பிறகு மேல்படிப்பை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தார். படிப்பு முடித்த சூ கி ஐ.நா. தலைமையகத்தில் மூன்றாண்டு காலம் பணியாற்றினார். பின்பு பூடான் அயல்துறை அமைச்சருக்கு ஐ.நா. விஷயங்களில் ஆலோசனை கூறும் வேலை சூ கிக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் பூடான் மன்னர் குடும்ப பிள்ளைகளுக்கு ஆசிரியராகவும் பூடான் அரசாங்கத்தினால் மொழிப் பெயர்ப்பாளராகவும் இருந்த ஆங்கிலேயரான மைக்கேல் ஏரிஸ் என்பவருடன் சூகிக்கு காதல் ஏற்பட்டு இருவரும் 1972ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி லண்டனில் திருமணம் செய்து கொண்டனர்.

சூகி இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். மூத்த மகனுக்கு அலெக்ஸாண்டர் என்றும், இரண்டாவது மகனுக்கு (கிம்) என்றும் பெயரிட்டனர். சூகியை பொறுத்தவரை தந்தையின் சுதந்திரப் போராட்ட நினைவும், பின்பு மக்கள் படும் துயரும் எப்போதும் வேதனைப்படுத்தியே வந்தது. 1948 முதல்1962 ஆம் ஆண்டு வரை ஊ.நு. பிரதமராக இருந்தார். 1962ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி ராணுவம் நீவின் தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது. பிரதமர்ஊநுவை சிறையில் அடைத்தது.  ராணுவ ஆட்சியில் தனி மனித சுதந்திரம்ஒடுக்கப்பட்டது. அதிகாரிகளை நீக்கிவிட்டு அந்த இடங்களில் 70 சதவீதம் வரை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை நியமித்தது. அனைத்து அதிகாரங்களும் ராணுவ சர்வாதிகாரியான நிவின் வசமே இருந்தது. தனக்கு ஆதரவாகசெயல்பட ‘பர்மா சோசலிஸ்ட் மக்கள் கட்சி’ என்ற கட்சியை உருவாக்கினார். ராணுவ ஆட்சியில் பலமுறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் ஆயிரத்திற்கும் மேல் தூக்கிலிடப்பட்டனர். 12, 13 வயது மாணவர்களுக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. மக்கள் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வந்தனர். 1991ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு சூகி தேர்வு செய்யப்பட்டதாக நார்வேயில் அறிவிக்கப்பட்டது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டி ஜனநாயக ஆட்சிமுறையை கொண்டுவர மாபெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இயக்கத்தின் தலைவர் சூகியையும் அவரின் பல ஆயிரம் தொண்டர்களையும் சிறையிலும் வீட்டு சிறையிலும் அடைத்திருப்பது கிட்டத்தட்ட உலகம் அறியாத ஒன்றாகத்தான் இருந்தது. 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சூகி. ஆனால் உலக மக்கள் ஆதரவும், நிர்ப்பந்தமும் மியான்மர் மக்களின் போராட்டங்களும் அவரை வெளியே கொண்டு வந்தது. சூகியின் தந்தை நாட்டு விடுதலைக்காக போராடினார். மகளோ ஜனநாயகத்தை மீட்கப் போராடிக் கொண்டிருக்கிறார். 1990ல் நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் மகத்தான வெற்றியை அளித்தனர். ராணுவ ஆட்சியாளர்களோ ஜனநாயகத்திற்கான வழியை அடைத்தனர். மீண்டும் 2015ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சூகிக்கு மகத்தான வெற்றியை அளித்தனர்.  சூகியை அதிபராக விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக ராணுவ ஆட்சியாளர்கள் சட்டத்திருத்தம் செய்தனர். அதன்படி வெளிநாட்டு நபரை திருமணம் செய்த பெண் மியான்மரில் சட்டப்படி அதிபராக முடியாது. சூகியின் இரு மகன்களும் பிரிட்டிஷ் பிரஜைகள் என்பதால் அவர்களும் பொறுப்புக்கு வர முடியாது. நாடாளுமன்ற மேல்சபை, கீழ்சபை மற்றும் ராணுவத்தை சேர்ந்த மூவர் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

வெற்றி பெற்றவர் அதிபர் ஆகவும் தோற்ற இரு உறுப்பினர்களும் துணை அதிபர்களாகவும் இருப்பார்கள். 10 சதவீத உறுப்பினர்களை ராணுவம் நியமனம் செய்யும். 80 சதவீத வெற்றி பெற்ற சூகியின் கட்சியைச் சேர்ந்தவர் அதிபராக வர முடியும்.

ஆனால் சூகியால் அதிபராக முடியாது. ஒரு தலைமுறையின் தொடர் போராட்டத்தில் ஜனநாயகம் வெற்றி பெற்றது. உலக மக்களின் எதிர்பார்ப்பு ராணுவ ஆட்சியாளர்கள் வழிவிடுவார்களா? சூகியின் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வருமா? ஜனநாயகம் மீண்டும் மியான்மரில் தளைத்தோங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

%d bloggers like this: