ராய்ப்பூர், நவ. 22 –

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் பெண் மாவோயிஸ்ட்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா மாவட்டத்தில் உள்ள காதிராஸ் என்ற பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக சனி இரவு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சிறப்பு அதிரடிப் படையினரும், மத்திய ரிசர்வ் படை போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப் புப் படையினர் மீது மாவோயிஸ்ட்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த சண்டையில் நான்கு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் கூறினர். மேலும் சிலர் தப்பி யோடிவிட்டதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. காயமடைந்த மாவோயிஸ்ட் மூத்த தலைவர் ஒருவரை அவரது கூட்டாளிகள் வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றுவிட்டதாகவும் பாதுகாப்புப்படை கூறியிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.