வேடசந்தூர், நவ.22-

பெங்களூரில் இருந்து மதுரைக்கு இறந்த மூதாட்டியின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்தது. பெங்களூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் வெங்கடேஷ் இவரது தந்தை சுந்தர் ராஜ், தாயார் சாவித்திரி மற்றும் குடும்பத்தினர் பெங்களூரில் வசித்து வருகிறார்கள். சாவித்திரி (64) இவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இவரது உடலை தங்களது சொந்த ஊரான மதுரை ஆண்டாள்புரத்திற்கு கொண்டு வருவதற்காக தனியார் ஆம்புலன்சில் சாவித்திரியின் உடலை ஏற்றிக் கொண்டு வெங்கடேஷ் மற்றும் அவரது தந்தை சுந்தர் ராஜ் ஆகியோர் உடன் வந்தனர்.

ஆம்புலன்ஸை பெங்களூர் ஜெய்நகரைச் சேர்ந்தநாகு (27) என்பவர் ஓட்டி வந்தார். ஆம்புலன்ஸ் கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டி பிரிவு அருகே வந்து கொண் டிருந்த போது மழை பெய்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. ஆம்புலன்சில் வந்தயாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாற்று ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சாவித்திரியின் உடல்ஏற்றப்பட்டு மதுரை புறப்பட்டுச்சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: