சென்னை, நவ.22-

பாதாளச்சாக்கடை அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசு அப்பட்டமாக தோல்வி அடைந்துள்ளதை இந்த மழை – வெள்ளம் நிரூபித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கொட்டித் தீர்த்த கன மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடசென்னை முழுவதும் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தராசன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (நவ.22) பெரம்பூர், வில்விவாக்கம் பகுதிகளை பார்வையிட்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்கினர். அப்பொழுது மாநில அரசு மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், “கனமழை வரும் என்று அக்டோபர் மாதமே வானிலை ஆய்வாளர்கள் கணித்துக் கூறிய பின்னரும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை” என்று மாநில அரசு மீது ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சுமத்தினார்.

ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பு வெள்ளத் தடுப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செப்டம்பர் மாதத்திலேயே செய்திருக்க வேண்டும். ஆனால் இந்தாண்டு மெத்தனமாக இருந்து விட்டது. நவம்பர் முதல் வாரத்தில் தான்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை நிதி ஒதுக்கப்பட்டது. அதற்குள் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. முன்னெச்சரிக்கைக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வெள்ள நிவாரணத்திற்காக செலவிடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

குறைத்து மதிப்பிடப்படும் சேதம்

சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து ஏரிகளும் மழை வெள்ளத்தால் தண்ணீர் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று தெரிந்தும் அரசு உரிய நட வடிக்கை எடுக்காததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.கடந்த பல ஆண்டுகளாக ஏரி, குளங்கள், ஆறுகள், கால்வாய்கள் தூர் வாரப்படவில்லை, நீர்நிலைப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே இந்த பாதிப்புக்கு காரணம் என்று கூறிய ஜி.ராமகிருஷ்ணன், தமிழகத்தில் வெள்ளபாதிப் புக்கு காரணம் அரசின் கையாலாகாத்தனம் என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். அரசின் இந்த தோல்வியை மூடி மறைக்கவே சேதாரத்தின் அளவு குறைத்துமதிப்பிடப்படுகிறது எனவும் குற்றம்சாட் டினார்.

திட்டங்களின் தோல்வி:-

மாநில அரசு ஒதுக்கிய நிவாரணத் தொகை ரூ.500 கோடிஎன்பது மிகவும் சொற்பமான தொகையாகும். வெள்ளத் தில் ஏற்பட்ட சேதாரங்களை உரிய முறையில் மதிப்பீடு செய்து கூடுதல் நிதியை ஒதுக்குவதுடன் மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிக நிதியை பெற்றுத்தர ஆளும் அரசு முனைப்பு காட்ட வேண்டும். பாதாளச்சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் திட்டத்தில் மாநில அரசு படுதோல்வி அடைந்துள் ளதை இந்த கனமழை உணர்த்திவிட்டது என்றும் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப நிவாரணப் பொருட்கள் வழங்கி களப்பணியாற்றி வருகிறார்கள் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

போர்வைகள்:-

முன்னதாக, பெரம்பூர் உதயசூரியன் நகரில் உள்ள அனைத்து பிளாக்குகளிலும் உள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், சி.திருவேட்டை, பகுதிச் செயலாளர் விஜயன், ராஜ்குமார், பாண்டியன், வசந்தகுமார், பரதன்,பிரமிளா ஆகியோர் பங்கேற்றனர். வில்லிவாக்கம் சிட்கோ நகரில் 4,5,9,10 செக்டர் பகுதிகளில் வெள்ள பாதிப்புக்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ரொட்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ராதை, இரா.முரளி, பகுதிச்செயலாளர் டில்லிபாபு, எம்.ஆர்.மதியழகன், கோ.அன்பழகன், அருட்செல் வம்,தாமஸ், மணிமேகலை, முத்துக்குமார், ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: