16 வீடுகள் இடிந்து சேதம்

மதுரை,நவ.22-

போடி, தேவாரம், ஆண்டிபட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. இதில் 16 வீடுகள் சேதமடைந்தன. போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்தது. பிற்பகல் வரை தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் கனமழையால் போடி பாதாளச் சாக்கடைத் திட்டப் பகுதிகளில் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

போடி பகுதியில் பெய்த கனமழையால் போடி முந்தல் சாலையில் பகவதியம்மன் கோவில் அருகே வசிக்கும் ராமசாமி என்பவரது தகர வீடு முழுவதும் இடிந்து விழுந்தது.போடி கலைவானர் தெருவில் மல்லிகா, பொன்ராம் ஆகியோரின் வீட்டுச் சுவர்கள் சேதமடைந்தன. உப்புக்கோட்டை கிராமத்தில் சின்னபொன்னு, மணியம்பட்டி கிராமத்தில் கொண்டயபோயன், சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தகிருஷ்ணம்மாள், செல்வரதி ஆகியோர் வீட்டு சுவர்கள் இடிந்து சேதமடைந்தன.

கோடாங்கிபட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி, கூழையனூரைச் சேர்ந்த லட்சுமணன், வீரமணி, மேலச்சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி, வெள்ளைத்தாய் ஆகியோரது வீட்டுச் சுவர்களும் இடிந்து சேதமடைந்தன. வீடுகள் இடிந்தது குறித்து போடி வருவாய்த்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர். தொடர்மழையினால் மணியம்பட்டி சப்பாணி கண்மாயில் தண்ணீர் நிரம்பி அப்பகுதியில் தோட்டங்களுக்குள் புகுந்தது. கிணறுகளும் மணல் மேடானது.

தேவாரம் பகுதியில் சுமார் மூன்று மணி நேரம்மழை பெய்தது. இதனால்தேவாரம் மேற்குப் பகுதி
யில் உள்ள பிரம்புவெட்டி ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொட்டிப்புரம் அம்பரப்பர் மலை ஓடையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.ஆண்டிபட்டிஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்த குமரவேல் (42)என்பவர் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் சுவர் இடிந்தது. சிறிதுநேரத்தில் மற்றொரு வீட்டின் சுவரும் இடிந்தது. இதில் வீட்டில் உள்ள பாத்திரங்கள் சேதமடைந்தன.

வேடசந்தூர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதியில் கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்தது. இதில் வேடசந்தூர் அருகே உள்ள கீழக்குமாத்தினிபட்டியில் காய்ந்த நிலையில் இருந்த இச்சிமரம் வேரோடு ராஜா என்பவரின் வீட்டோரத்தில் விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த ராஜாவின் மனைவி ராஜே°வரி மற்றும் அவருடைய குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதில் மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் ராஜாவின் மகள் மதுமிதா(10) என்பவருக்கு கையில் லேசானகாயம் ஏற்பட்டு வேடசந்
தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.மதுரைதிருமங்கலம், பேரையூர், சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஞாயிறு காலைவிட்டு விட்டு மழை பெய்தது. எனினும் சாத்தையாறு அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை.உசிலம்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை ஞாயிறும் தொடர்ந்தது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஞாயிறு காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. சில இடங்களில் தூறலாகவும், சில இடங்களில் தொடர்ந்து மழையும் பெய்தது. பழனி திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. மழையின் காரணமாக, பழனி மலைக்கோவிலில் ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள், படிப்பாதை மற்றும் யானைவழிப்பாதையை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண் டுள்ளது. மழை காரணமாக, கொடைக்கானல் – வில்பட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.