சென்னை, நவ. 22-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 34 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கடலோர காவல்படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர் களும் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அண்மையில் இலங்கையில் இருந்து தமிழக மீனவர்கள் 124 பேர் தமிழகம் திரும்பினர். கோடியக் கரை கடல் பகுதியில் பிடிபட்ட இலங்கை மீனவர் இருவரும் காரைக்காலில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய சிறைகளில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 34 பேர் இலங்கைக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காரைக்கால் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இலங்கை மீனவர்கள் பின்னர், அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனிடையே, இந்திய மீனவர்கள் இருவர் தங்களது படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையிலான நட்புறவு அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: