மும்பை, நவ. 22

செல்போன் டேட்டா கட்டணங்கள் குறையும்?

இந்தியாவில் செல்போன் டேட்டா கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது. இந்திய செல்போன் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் பதிக்க உள்ளதன் விளைவாக நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி உருவாகும் என்றும் இதன் மூலம் கட்டணம் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ஃபிட்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 4 முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் கடும்போட்டியால் அவற்றின் லாப விகிதங்கள் குறையும் என்றும் ஃபிட்ச் கூறியுள்ளது.

2015ம் ஆண்டில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்தும் அந்நிறுவனங்களுக்கு மாதம் சராசரியாக 170 ரூபாய்வருமானம் கிடைத்து வருவதாகவும் வரும் ஆண்டில் இது 160 ஆக குறையும் என்றும் அதன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: