சென்னை, நவ.22-

சென்னை மாநகராட்சி தரவுகளின் படி இந்த மாதத்தில் மட்டும் 40 பேர் டெங்கு காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இந்த மாதத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.இந்த ஆண்டில் அக்டோபர் மாதம்வரை டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, மொத்த 1,955 காய்ச்சல் நோயாளிகளில் 545 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதில் 40 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.வயிற்றுப்போக்குக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 113 என்று பதிவாகியுள்ளது.

4 -ம் மண்டலம் தண்டையார்பேட்டையில் காய்ச்சல்,வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்ற போதிலும் இந்த சீசனில் இது வழக்கத்துக்கு மாறானது அல்ல. பதற்றப்பட வேண்டிய நோய்ப்பரவல் அல்ல. நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்“ என்றார்.

Leave A Reply

%d bloggers like this: