சென்னை, நவ. 22-

தமிழ் நாட்டில் கடலோர மாவட்டங்களில்  நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை அருகே தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், இலங்கை அருகே சனிக்கிழமை தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது ஞாயிற்றுக்கிழமை மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றார்.

சென்னை நகரில் விட்டு விட்டு மழை பெய்யும். ஒருசில நேரங்களில் கன மழையும் பெய்யும் என்றும் அவர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அதிகபட்சமாக 9 செ. மீ மழை பதிவாகி உள்ளது.  புதுச்சேரி-7 செ.மீ, ராமநாதபுரம்-6 செ.மீ, சோழவரம்-5 செ.மீ, மன்னார்குடி, குடவாசல், விழுப்புரம், அம்பாசமுத்திரம், செங்குன்றம், சிதம்பரம், கமுதி-4 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.

Leave A Reply