பாலாசூர், நவ. 22 –

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை இந்தியா ஞாயிறன்று பரிசோதித்துப் பார்த்தது. ஒடிசா மாநிலம் பலாசூரில் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பல்வேறு பரிசோதனைகளைக் கடந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை குறிவைத்து தாக்கியதாகவும் அவர்கள் கூறினர்.

7.5 மீட்டர் நீளமுடைய இந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் எந்தவொரு ஏவுகணையையும் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது என்றும் விஞ்ஞானிகள் கூறினார்கள். சூப்பர்சானிக் ரகத்தைச் சேர்ந்த, அதாவது ஒலியைவிட வேகமாகச் செல்லும் திறன் படைத்த இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றிருப்பது இந்திய பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க அம்சமாக கருதப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.