கொழும்பு:-

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவை என்று கருதப்பட்ட பலஅமைப்புக்கள் மீது விதித்திருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. ஆனாலும், தமிழீழ விடுதலைப்புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஏனையசில அமைப்புகள் மீதான தடைதொடரும் என வெள்ளிக்கிழமை இரவு அரசு வெளியிட்டுள்ள சிறப்பு இதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடியன் தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ் உட்பட, ஏனைய சில அமைப்புக்களின் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளதையும் அரசிதழ் மூலம் அறிய முடிகிறது. தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து நவம்பர் 20ஆம் தேதியிட்டு வெளியாகியுள்ள இந்த திருத்தம் செய்யப்பட்ட அரசிதழில் முன்னர் தடைவிதிக்கப்பட்டிருந்த பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த 2012ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தபய ராஜபக்ஷவினால், இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலானவர்கள் என தெரிவித்து தடை விதிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: