இராமேஸ்வரம், நவ. 22-

இராமேஸ்வரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஞாயிறு அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண் டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்ததுடன் படகில் இருந்து மீனவர் வர்க்கீஸ் என்பவரை இரும்புக் கம்பியால் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர்.

20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன் பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை கடலில் வெட்டிவிட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் காய மடைந்த மீனவர் வர்க்கீஸ் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து மீனவ சங்கத் தலைவர்கள் மீன்வளத்துறை மற்றும் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: