கரூர்,நவ.22-

கரூர் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 30 பயணிகள் படுகாயமடைந்தனர். கோவையில் இருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்து ஒன்று ஞாயிறன்று சென்றுகொண்டிருந்தது. கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்றது. சாலையில் மழைநீரும் தேங்கியுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநர் நிலைகுலைந்தார்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலை யோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணி கள் படுகாயமடைந்தனர். பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நாய் பலியானது. கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் பாதிக்கப் பட்டவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: